நான் தேசிய சித்த மருத்துவ
நிறுவனத்தில் முதுநிலை மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம்
அது!!!! ஆயுஷ் துறையின் செயலாளர்,
எங்களது நிறுவனத்திற்கு வருகை தந்தார். அப்போது
மருத்துவ மாணவர்களுக்கும் செயலாளாருக்கும் இடையே கலந்துரையாடல் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. எங்களுடைய கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களையும் அளித்தார்.
“drug testing laboratory” எப்போது
வரும் என்று மாணவர் சார்பில்,
ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
”நீங்க MD படிக்கிறீங்க” ஆதலால் நோயாளியை பார்த்தல்
மற்றும் நோயை குணமாக்குதலில் கவனம்
செலுத்துங்கள் என்றார். PhD (ஆராய்ச்சி) படிப்பு தொடங்கும் போது,
அதனை பார்த்து கொள்ளலலாம் என்றார்.
அவரது பதிலில், எனக்கு ஒர் தெளிவு
பிறந்தது. ஆராய்ச்சி செய்தல் மற்றும் நோயாளியை
அணுகி நோயை தீர்த்தல் ஆகிய
இரண்டும் நேர்கோட்டின் இரு விளிம்பில் இருப்பவை.
இரண்டையும் ஒருவரே செய்வது என்பது
கடினம் என்று தோன்றுகிறது. பிழைகள்
ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால்
நவீன அறிவியல் உலகம், மேற்கண்ட இரு
பணிகளையும் சித்த மருத்துவரிடம் இருந்தே
எதிர்பார்க்கிறது. எத்தகைய நகை முரண்!?!?!?
ஆங்கில
மருத்துவத்தில் இருந்து, ஒரு மருந்து வெளியாக
குறைந்தபட்சமாக 10-12 வருடமாகிறது. Preclinical and
clinical என்ற இரு நிலைகளிலும், ஆராய்ச்சி
பணியில் ஈடுபடுவர்கள், பெரும்பாலும் மருத்துவர் அல்லாதவர்களே!!!! அதாவது pharmacologist,
microbiologist, chemists, epidemiologist போன்றோர்களே
அதிகமாக ஈடுபடுகின்றனர்.
ஆங்கில
மருத்துவத்தில், ஒரு மருந்தை கண்டுபிடித்து
வெளியிடுவதற்கு குறைந்தபட்சமாக 200 கோடி செலவாகிறது. அதனை
பெரும்பாலும் மருந்து கம்பெனிகளே ஏற்கிறது.
அந்த செலவை, 5 ஆண்டுகளிலே மருந்து தயாரிக்கும் நிறுவனம்
லாபமாக ஈட்டி விடும். அதோடு
மட்டுமில்லாமல் அரசும் மானியம் வழங்குகிறது.
ஆனால் இந்திய மருத்துவ முறையில்
உள்ள மருந்துகளில் ஆராய்ச்சி செய்து வெளியிடுவதற்கு, மருந்து
நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் காப்புரிமை பெற
முடியாது. இத்தகைய முன்னெடுப்பதில், சில
ஆயுர்வேத நிறுவனங்கள் செய்கின்றன. ஆதலால், இந்தியாவை தாண்டி
வெளிநாடுகளிலும் அடைய முடிகிறது.
சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய மற்ற துறை
வல்லுனர்கள் முன்வர வேண்டும். அதிலும்
குறிப்பாக pharmacologist,
microbiologist, chemists, epidemiologist போன்றோரின்
பங்கு முக்கியம். அது போல் மருந்து
தயாரிக்கும் நிறுவனங்களும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.
தேரினை
இழுப்பதற்கு, சித்த மருத்துவர் என்ற
ஒருவர் மட்டுமே ஈடுபட்டால் சக்கரம்
சுழலாது. பல்வேறு கைகள் இணைய
வேண்டியது, காலத்தின் கட்டாயம்!!!!!. வாருங்கள் சித்த மருத்துவத்தை முன்
இழுப்போம்!!!! அறிவியல் எனும் அச்சாணியில் வடம்
இழுப்போம்!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment