நமக்கு
தெரிந்தோ அல்லது தெரியமாலோ காலத்தினால்
சில காரியங்கள் தீர்மானிக்கப்படும். அப்படியொன்று தான் பொருளாதாரம் வழிமுறை!!!
கிராம பொருளாதாரம் மறைந்து, நாடு என்ற அமைப்பியலால்,
ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பொருளாதாரமாக மாறியது. இவ்வகையான பொருளாதார மாற்றத்திலே…. பொதுநலம் என்பது மறைந்து சுயநலம்
துளிர்விட ஆரம்பித்தது.
மேற்கத்திய
நாடுகளின் அதீத பொருளாதார வளர்ச்சியினால்,
தன் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை
செய்ய, மாற்று வழியினை தேடினார்.
அப்போது… அவர்கள் கண்ணில்….. வளரும்
மற்றும் ஏழை நாடுகள் மட்டுமே
கண்ணில் பட்டன. இவ்வாறு…… மற்ற
நாடுகளில் விற்பனை செய்யும் பொருட்டு,
உலகமயமாக்கல் என்ற நடைமுறை வந்தது.
கிராம பொருளாதாரத்தில், நேரடியான விற்பனை முறை இருந்ததால்,
சுயநலம் என்பது குறைவாக இருந்தது.
ஆனால் உலகமயமாக்கல் தன்மையினால், மறைமுக மாற்றமே அதிகம்.
அதனால்…. சுயநலம் வேறூன்ற ஆரம்பித்தது.
இந்த இடத்தில்…… முதலாளித்துவ பொருளாதாரம் அதிகமாகி கம்யூனிஸ பொருளாதார தன்மை வீழ்ச்சியடைந்தது.
இன்றைய
சூழ்நிலையில், பொதுநலம் என்பது வார்த்தைகளில் மட்டும்
காண இயலும். நடைமுறையில் சாத்தியமே
இல்லாத ஒன்றாக மாறி விட்டது.
இந்த பாதிப்பு முதலாளி என்றில்லை. தினக்கூலி
முதல் பண முதலை வரை
ஊறி விட்டது.
இத்தகைய
மனநிலையே… இன்றைய அனைத்து பொருளாதார
மாற்றங்களுக்கும் சீர்கேட்டிற்கும் காரணமாக அமைகிறது. இவையெல்லாம்
நல்லவையா??? தீயவையா?? என்ற விவாதம் கூட
தேவையில்லை. அதனை பின்பற்றியே ஆக
வேண்டும் என்ற சூழ்நிலையே உள்ளது.
இந்த பொதுமனநிலையை புரிந்து கொள்ளாமல்…. சமீப காலமாக நடக்கும்
பிரச்சனைகளை அணுகினாலும் உபயோகமும் இல்லை.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment