Friday, October 28, 2016

தீபாவளியின் கொண்டாட்ட மனநிலை

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்திற்கு பொருளாதாரமே(பணம்) முக்கிய காரணமென்பேன்!!!

1990 பிறகு ஏற்பட்ட, உலகமாயமாக்கல் கொள்கையினால்.... இந்தியாவின் சேவை துறையின் வளர்ச்சி இமலாயத்தை ஒத்தது. அவ்வளர்ச்சியில் வட இந்தியாவை காட்டிலும், தென்னிந்தியாவே மெச்சும் படியான வளர்ச்சியை எட்டியது. இத்தகைய காரணங்களால்.... பணம் சார்ந்த வாழ்வியலில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது.

தீபாவளி என்பது புத்தாடை, வெடி மற்றும் இனிப்பு வகைகள் என்ற மூன்று வகையான பொருட்களே, ஆனந்தத்தை தரவல்லது.

90 களுக்கு முன்பு வரை, தீபாவளி தவிர்த்த மற்ற நேரங்களில்.... மூன்று வகையான பொருட்களும் வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பது மிக குறைவாகவே இருந்தது. அதனால் தீபாவளி வந்தால், மேற்கண்ட பொருட்களை பெறலாம் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆதலால் தீபாவளி மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

ஆனால் இன்றோ... பொருளாதாரத்தினால் முன்னேறி விட்டோம். புத்தாடை மற்றும் இனிப்பு வகைகளை எப்போதும் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலலாம் என்ற நிலை உள்ளது. அதனால்... வருகின்ற தீபாவளி மீதான ஆர்வம் குறைந்துள்ளது. (மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு)

ஆனால் கீழ்த்தட்டு மக்களுக்கான தீபாவளி இன்னும் மகிழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் பொருளாதாரம் இன்னும் சிறப்படைய வில்லை என்பது கண் கூடான உண்மை. அதே போல் குழந்தைகளுக்கு வெடி மீதான ஆர்வம் இருப்பதனால்... அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வரை குறையாது.
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம்!!

அன்பர்களுக்கு தீப ஒளி நல்வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment