கடவுளை
பற்றிய புரிதலில்... .கொஞ்சம் ஆழமாய் பகுத்தறிவின்
வழியே சிந்தித்து பார்த்தால், கடைசியில் கடவுளே இல்லை என்றே
நினைக்க தோன்றுகிறது.
ஆனால்...
அப்படியாக கருத்தியலில் மனதை நிலை நிறுத்தி
கொள்வதிலும்... இருவகையான பிரச்சனைகளை உணர்கிறேன்.
1. தன்னை
விட மேலானவன் இல்லையென்பதால், ”நான்” என்ற போதையும்,
தன்னை கட்டுபடுத்த யாருமில்லை என்ற அதிகார போதையும்
கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது.
2. எனக்கொரு
பிரச்சனை வரும் போது, அந்த
நேரத்தில் கை காட்டுவதற்கும், சாய்ந்து
கொள்வதற்கும் ஒருவர் தேவைப்படுவார். அத்தகைய
பாதுகாப்பு நிலையையும், நான் இழந்து விடுவேன்
என்ற பயமும் உள்ளது,
மேற்கண்ட
இரு பிரச்சனைகளையும் கையாளும் அளவிற்கு மனம் பக்குவம் பெற்று
விட்டால்... வரும் காலங்களில் கடவுள்
இல்லை என்ற வாதத்தை நோக்கி
பயணிக்கலாம்.
ஆனால்...
அந்த நிலையை அடையாத வரை...
நான் கடவுள் உண்டு நிலையோடு
பயணிப்பது நல்லதென்று கருதுகிறேன்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment