Thursday, October 27, 2016

தீபாவளியும் பழங்கால நினைவுகளும்

இன்றைய நிலையில், 20-30 வயதினை கடந்தவர்களில் பலர்….. ” இப்ப கொண்டறதெல்லாம் தீபாவளியாநாங்க 20 வருஷனத்துக்கு முன்னாடி, எப்படியெல்லாம் தீபாவளி கொண்டாடினோம் தெரியுமா!?!?” என்று பேச ஆரம்பிப்பார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்னாடியே, டிரஸ் எடுத்து டெய்லர் கிட்ட கொடுத்து விடுவோம்…….. இரண்டு வாரத்திற்கு முன்னாடியே.. முருக்கு, அதிரசத்திற்கெல்லாம் மாவு அரைச்சி விடுவொம்ஒரு வாரத்திற்கு முன்னாடியே வெடியெல்லாம் வாங்கி விடுவோம் தெரியுமா???? “ என்றவாறு தொடரும் அந்த உரையாடல்…..

மேற் கூறிய கூற்று உண்மையா????நிச்சயமாக கிடையாது என்பேன்.

இதே உரையாடலை….இருபது வருடங்களுக்கு முன்பு, நமது தந்தை நம்மிடம் சொல்லி இருப்பார்…. இன்று நாம், நமது பிள்ளைகளிடம் சொல்லி கொண்டிருப்போம்!!!!! இன்னும் 10-20 வருடங்கள் கழித்துஇதே உரையாடல், நமது பிள்ளைக்கும், அவனது பிள்ளைக்கும்(நமது பேரனுக்கும்) தொடரும்
.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப, தீபாவளிக்கான சில வடிவ மாற்றங்களை சமூகம் ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.. அத்தகைய சமூக மாற்றத்தினால்.. இத்தகைய வேறுபாடுகளை நாம் உணர்ந்து கொண்டே இருப்போம்!!!! அவ்வளவு தான் வித்தியாசம்

இதனை தாண்டி, இன்னுமொரு உளவியலை முக்கியமாக காரணமென்பேன். சிறு வயதில் செய்த விஷயங்கள் அனைத்தையும், மனம் மிகவும் அருமை என்றே எடுத்து கொள்கிறது.

பணம் என்பது குழந்தைகள் சார்ந்ததாக இல்லையென்பதால், எல்லா தருணங்களையும் ஆனந்தமாக எடுத்து கொள்ள முடியும். ஆனால், வயது அதிகமாக தொடங்கும் போது, பொருளாதாரம் முன்னிலைப்படுத்தும் போது., சந்தோஷ தருணங்கள் கூட, பணத்தினால் தடைப்பட்டு விடும். ஆனால் குழந்தைகள் எதையும் யோசித்து கொண்டிருப்பதில்லை. அந்த தருணத்தை மட்டுமே நினைக்கும்.

இவ்வாறு தீபாவளி பற்றிய சிறு வயது நினைவுகளேஆழமாய் பதிந்திருப்பதால்இன்னும் பழங்கதைகளே பேசி, நம்மை நாமே ஆனந்தப்படுத்தி கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment