Saturday, October 22, 2016

தீபாவளியும் வியாபர உத்திகளும்

தீபாவளி வியாபரம் களை கட்ட தொடங்கி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைஒரு மாதமாக இருந்த வியாபரம், இப்போது ஒரு வாரத்திற்குள் சுருங்கி வந்து விட்டது. அதனால், அனைத்தும் கடைகளும் தள்ளுபடிகளையும், இலவசங்களையும் அள்ளி தெளிக்கின்றன!!!! இவையெல்லாம் வியாபர உத்தி என்ற பெயரில், பெரும்பாலும் நுகர்வோரை சுரண்டுவதாக அமைகிறது என்பது மட்டும் உண்மை. அவற்றில் சில

#முதல்_வகை

தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி மாதங்களில், அனைத்தும் வணிக நிறுவனங்களும் தள்ளுபடி அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. அது 10 சதவீதம் முதல் 50-60 சதவீதம் வரை நீளலாம்.

இலாபத்தில் குறைத்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். பண்டிகை காலங்களில் அதிகமாக விற்பனை நடப்பதால், குறைந்த லாப சதவீதமாக இருந்தாலும், நல்ல லாபம் கிடைத்து விடும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்பதால், இருவருமே பயன் அடைகிறார்கள்.

#இரண்டாவது_வகை

5000 ரூபாய் மேல் பொருட்கள்/துணிகள்/ சுவிட்கள் வாங்குவோருக்கு சிறப்பு பரிசு. இப்படியாக 1000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை, நீங்கள் வாங்கும் அளவுக்கு ஏற்ப, பல சிறப்பு பரிசுகளை அறிவிக்கின்றனர். சிறப்பு பரிசு அறிவிப்பதன் மூலம் பொது மக்களை, அதிக பொருட்களை வாங்க வைக்கலாம் என்ற நம்பிக்கை. பொதுமக்களும், மேற்கண்ட மனநிலையை விட்டு வெளிவரவில்லை என்பதும் உண்மை.

இதில் இரு வகையான வியாபர உத்திகள் கையாள படலாம். ஒன்று பொருளின் விலையை உயர்த்தி, அந்த லாபத்தை வைத்து சிறப்பு பரிசுகளை கொடுத்து விடலாம். மற்றொன்று அவர்களின் லாப சதவீத்தை குறைத்து, சிறப்பு பரிசு வழங்கலாம். இந்த சிறப்பு பரிசு முறையிலும், வியாபரிகளுக்கும் நுகர்வோருக்கும் லாபமே தவிர நட்டமில்லை.

#மூன்றாவது_வகை:

இதுவும் ஒரு வகையான சிறப்பு பரிசு திட்டமே!!. ஆனால் சற்று வித்தியாசமானது. பெரிய நிறுவனங்களில், இந்நடைமுறை உள்ளது. சிறப்பு பரிசாகநுகர்வோரில் சிலருக்கு மட்டும், அதிக விலையுள்ள பரிசை வழங்குவது. முதல் பரிசாக கார். இரண்டாவது பரிசாக பைக் என ஆறுதல் பரிசாக வாட்ச் என்று பட்டியல் நீளும். 1 லட்சம் வாடிக்கையாளர் என்று வைத்து கொண்டால், அதில் அதிகபட்சமாக 50 பேர் வரைக்கும் மட்டுமே பரிசு கிடைக்கும்.

இதிலும் இருவகையான வியாபர உத்தி கையாளப்படலாம். ஒன்று லாப சதவீதம் குறைவு. மற்றொன்று பொருளின் விலையை ஏற்றி, அதன் மூலம் சிறப்பு பரிசுகளை வழங்குவது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைக்கு பெரிய வித்தியாசமில்லை என்றாலும், மூன்றாவது வகையினரேஅதிகமாக சுரண்டப்படுகின்றனர். ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்று, அதனை ஒரு சிலருக்கு மட்டுமே மொத்தமாக வழங்குவதற்கு ஒப்பானது. இது ஒர் வகையான லாட்டரி சிட்டிற்கே ஒப்பானது; மறைமுக சுரண்டல் எனலாம்.

மேற்கண்ட அனைத்திலும், வியாபரம் என்ற பெயரில், ஆசையை தூண்டி பணம் பெற முயல்கின்றன. பணம் பெறுவதே வியாபரத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், அடுத்தவரை ஏமாற்றுவதற்கு(?) வியாபர உத்தி என்ற அடைமொழியில் அமர்ந்து கொள்கிறமோ என்ற கேள்வியும் எழுகிறது. நவீன பொருளாதார உலகம்இதனையே மறைமுகமாக மக்களிடையே புகுத்தி வருகிறது.

சரி.. மேற்கண்ட அனைத்திற்கும் வியாபரிகளையே குறை சொல்வதை விடுத்து, பொதுமக்களாகிய நாம்,,,, என்றாவது யோசித்து பார்த்து இருப்போமா??? படிக்காதவர் மட்டுமல்லபடித்தவரும் இலவசத்திற்கு அடிமையாகி தானே நிற்கிறோம்!!

ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை உண்டு. பணத்தின் மீதும்!! பொருளின் மீதும்!!! அதை பெறவேஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கிறோம். வியாபரிகள், தாங்களின் வியாபரத்தின் மூலம் பணம் பெறுகின்றனர். அதே போல், நாம் வேறொரு இடத்தில் மற்றவரை ஏமாற்றி கொண்டிருப்போம்.. அவ்வளவு தான் வித்தியாசம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment