Monday, October 17, 2016

நீயா நானா- சமூகவியல் மாற்றங்கள்

நேற்றைய தினம், விஜய் டிவியின் நீயா நானா விவாதம்..... சமூக மாற்றத்தின் முக்கியமான நிகழ்வை ஏதிரொலித்தது எனலாம்.

இத்தகைய விவாதம் தேவை தானா? என்ற கேள்வியே, என்னுள் முதலில் எழுந்தது. ஆனால், சற்று ஆழமாய் சிந்திக்கும் போது, தேவை தான் என்று தெரிந்தது.

விவாதம்... இரு முக்கிய புள்ளிகளை, தொட்டு சென்றது எனலாம். 1. மத்திய/கீழ்த்தட்டு வர்க்கம்,... மேல்தட்டு நிலையை அடைவதற்கு, ஆண்களுக்கு அழகு தேவைப்படுகிறது. 2. ஆண்களும் மேக்கப் போட்டு அழகாக தெரிவது, சமூக மாற்றத்தின் முக்கியமான நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.

முகத்தை பளபளக்கும் கீரிம், பேஸ் வாஷ் கீரிம், செண்ட் வகைகள், வண்ண வேஷ்டி வகைகள்... இப்படியாக, ஆண்களுக்கான அழகு சாதன பொருட்களை பற்றிய விளம்பரங்கள் அதிகமாக வருவது, இதன் பிண்ணனியே!!!!

திருமண விவாகரங்களிலும்.. இந்நிலை பிரதிபலிக்கிறது.
காலம் காலமாய், ஆண்களின் குணங்களாய் கருதப்பட்ட அதிகாரமும், பொருளாதாரமும்....கால மாற்றினால் பெண்களினால் எடுத்து கொள்ளப்படுவதை போல... பெண்களின் குணமாய் இருந்த அழகும்... இப்போது ஆண்களாலும் எடுத்து கொள்ளப்படுகிறது. அவ்வளவே!!!

ஆண்களின் உடைகளாக கருதப்பட்ட பல்வகை ஆடைகள்(ஜீன்ஸ்), பெண்களால் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கும்..... ஆண்களுக்கும் சில மனநிலை குழப்பங்கள் ஏற்பட்டன. அப்பெண்ணினை ஆணின் அடையாகமாகவே கண்டான்.... அதன் நீட்சியாக, மேக்கப் போடும் ஆணினை, பெண்ணின் அடையாளமாகவே பெண் கண்கிறாள். இச்சமூக மாற்றினை இருபாலினரும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment