Saturday, October 8, 2016

சித்தர் இலக்கியங்களில் சமூக பார்வை புத்தகம்

சித்தர் இலக்கியங்களில் சமூக பார்வை என்ற தொகுப்பு நூலை, வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. முனைவர் கருணாநிதி என்பவரால் தொகுப்பட்டு, சென்னையின் பாவை பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில், சமர்பிக்கப்பட்ட கட்டுரைகளை ஆசிரியர் தொகுத்து வெளியீட்டுள்ளார். இது முற்றிலும் தமிழ் ஆய்வாளர்களால் எழுதப்பட்டது.

சித்தர்களில் மருத்துவத்தை தாண்டிய பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. தத்துவம், இறைமை கோட்பாடு, சாதிய மற்றும் வருண கோட்பாடு மறுப்பு, மூடநம்பிக்கைகளை எதிர்த்தல் போன்ற பல தளங்களில் தமிழ் ஆய்வாளர்கள் விவாதித்துள்ளனர்.

சித்த மருத்துவ வரலாற்றை புரிந்து கொள்வதில், தமிழ் ஆய்வாளர்களின் பணி இன்றியமையாதது. அதற்கான சில ஆதாரங்களிலிருந்து, இந்நூலில் பெறலாம் என்று நினைக்கிறேன்.

திறனாய்வு நூல் என்பதால், பக்கங்கள் நகர மறுக்கிறது. புரியாத பல இடங்களினை கடந்து வந்து விட்டேன். நிச்சயமாக மறுவாசிப்பு செய்ய பட வேண்டிய நூல். இப்புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு, போதியளவு பகுத்தறிவும் அனுபவ அறிவும் எனக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

நீங்களும் வாசித்து பாருங்களேன்!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment