Tuesday, October 25, 2016

தென்காசி மரணமும் போலிகளும்

தென்காசி அருகே, நிரிழிவு நோயிற்காக, மூலிகை மருந்து உண்டு, மூன்று பேர் உயிரிழிந்துள்ளனர். வருந்த தக்க நிகழ்வு!!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும், இது மாதிரியான மற்றொரு நிகழ்வும் நடந்தது. முண்ணனி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர், நீரிழிவு நோயிற்காக மூலிகை மருந்தை உட்கொண்டு உயிரிழந்தார்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க வேண்டுமென்பதில் எள்ளவும் ஐயமில்லை. ஆனால்…. இது மாதிரியான நிகழ்வுகளை மட்டும் வைத்து கொண்டு, ஒட்டு மொத்த இந்திய மருந்துவ முறையின் மீது குறை கூறுவதையும் ஒத்து கொள்ள இயலாது.

அது என்ன வகையான மூலிகை மருந்து?? என்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை, அதை பற்றி கருத்துகள் கூற இயலாது. ஆனால், மருந்து கொடுத்தவர், முறையாக பயிற்சி பெற்று, மருத்துவ கவுன்சிலால் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவர் அல்லர் என்பது மட்டும் உண்மை.

எல்லா துறைகளிலும் போலிகள் புல்லுருவிகள் போல் முளைந்திருப்பது போல், சித்த மருத்துவத்திற்கும் விதிவிலக்கல்ல. மற்ற துறைகளினை போல், புல்லுருவிகளை களையெடுப்பதும் எளிதான காரியமும் அல்ல.

இந்தியா என்பது பல்வேறு கலச்சாரம் மற்றும் பண்பாட்டை தன்னகத்தே கொண்டது. அதில் பல்வேறு வகையான மருத்துவ முறைகளும் அடங்கி உள்ளது. இத்தகைய மருத்துவ முறைகள் மக்களோடு பிண்ணி பினைந்தவை. சுதந்திரத்திற்கு முன்பு வரை, பரம்பரையாக அனுபவ அறிவை கொண்டு மக்களிற்கு நலத்தை அளித்தவை.

நவீன மருத்துவம் இந்தியாவில் வலம் வந்த பிறகு, இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குப் படுத்தப் பட்டது. அதற்கு பிறகு, முறையாக கவுன்சில் அமைக்கப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு, முறையாக பட்டம் பெற்ற மருத்துவர்கள் வெளி வரத் துவங்கினர். அதனால், காலம் காலமாக வைத்தியர்களையும் ,தனியே தேர்வுகள் வைத்து, மருத்துவர்களாக பயிற்சி செய்ய அனுமதியளித்தது.

ஆனால், இன்னும் பல பரம்பரையாக வைத்தியம் செய்தவர்களும், குருக்களிடமிருந்து கற்றவர்களும், மற்ற வைத்தியர்களிடமிருந்து பெற்ற அறிவை கொண்டும், சொந்த விரும்பத்தினால் படித்தவர்களும், கால போக்கில் மருத்துவர் என்ற போலி வேஷத்துடன் வெளிவந்தனம் உள்ளனர்.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களே, மருத்துவ பணி செய்ய தகுதி பெற்றவர். இவர்களை தவிர்த்த மற்றவர்கள் அனைவரும் போலிகளே!!! இதனை பொது மக்கள் உணர வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, மருத்துவத்தின் தொடக்க புள்ளியிலிருந்து போலிகள் இருந்தே வந்துள்ளனர். அவர்களை ஒழிப்பது என்பது, மூன்று தளங்களிலிருந்தும் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று அரசு, இரண்டு மருத்துவர்கள். மூன்று நுகர்வோர்(அதாவது நோயாளிகள்). இந்த மூன்று வழிகள் மூலமும், இப்பிரச்சனைகளை அணுக வேண்டும்..

பொதுமக்களும், மருத்துவரின் உண்மை நிலையை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும். இதில் படிக்காதவர்கள் மட்டுமில்லாமல்,. படித்தவர்களும் இதில் அடக்கமே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment