சரவண ஸ்டோரில் விளம்பரத்தில், அந்நிறுவனத்தின் உரிமையாளரே நடிப்பது… அனைவரும் அறிந்ததே. ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன்,
சரவணன் தோன்றிய நிகழ்வு, பலரிடத்து
நக்கலை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தின் ஆரம்ப விழா தொடங்கி,
இன்றைய தீபாவளி விளம்பரம் வரை,
சரவணனே தோன்றுவது…. நல்லதொரு நிகழ்வென்றே சொல்லுவேன்.
ஆனால் மக்களிடம் வேறு வகையான புரிதலை
ஏற்படுத்தி உள்ளது. நக்கல், நையாண்டி
என அறுவருப்பான மனநிலையின் உச்சத்திற்கே சென்று விட்டனர். இவன்
எப்படி ஹன்சிகா, தமன்னா வோடு நடிக்கலாம்???
இவன் கலர் என்ன.. .அவங்க
கலர் என்ன??? … இப்படியாக கேள்விகள் அடுக்கி கொண்டே செல்கின்றனர்.
நிறம் மற்றும் உருவமைப்பு சார்ந்த
அழகை, நடிக நடிகைகளோடு ஒப்பிட்டு
நக்கல் செய்கின்றனர். பகுத்தறிவு பெரியார் வாழ்ந்த தமிழ்நாட்டில், இத்தகைய
தட்டையான புரிதல் வேதனை அளிப்பதாகவே
உள்ளது.
கொஞ்சம்
மாற்றி சிந்தித்து பார்ப்போம். உங்களை சரவணன் நடித்த
இடத்தில்… நடிக்க வைத்தால், ஒத்து
கொள்வீர்கள் தானே!?!? இல்லை.. நான் நடிகையோடு
நடிக்கும் அளவிற்கு தகுதியில்லாதவன் என்று ஒதுங்கி கொள்வீர்களா???
நிச்சயம் மாட்டீர்கள். அப்போதும்… உங்கள் சுற்றத்தாரே, இவ்வாறு
நக்கலடித்து கொண்டு தான் இருப்பார்கள்.
அது தான் வித்தியாசம்!!!
இதிலிருந்து
இரு வகையான புரிதலை எடுத்து
கொள்ளலாம். ஒன்று ஆணினை பற்றி
புரிதல். மற்றொன்று பெண் சார்ந்த புரிதல்.
ஒர் ஆணின் திறமையை நிறம்
மற்றும் உருவமைப்பை கொண்டு தீர்மானிக்க முடியுமா???
நிச்சயமாக முடியாது. நாயகன் பிச்சைக்காரனாக நடித்தால்
கூட, ஜீன்ஸ் பேண்ட் போட்டு
நடிக்க வைக்கும், தமிழ் சினிமா சொல்லி
கொடுத்த சமூக கட்டமைப்பின் நீட்சியே!!!....
” வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்ல
மாட்டான்..”, “ வெளிநாட்டுக்காரன் சொன்னால் சரியாக இருக்கும்…” போன்ற
தட்டையான புரிதலின் வெளிப்பாடுகள்…
ஒர் பெண்ணின் திறமையை, நிறம் மற்றும் உருவமைப்பு
சார்ந்த அழகோடு மட்டும் நிறுத்தி
கொள்வது….. குறுகிய மனப்பான்மை தவிர
வேறொன்றுமில்லை. பன்னொடும் காலமாக.. பெண்ணினை அழகு என்ற ஒற்றை
வார்த்தைக்குள் அடக்கி வைத்திருத்த சமூகத்தின்
தொடர்ச்சியாகவே, இதை கருத வேண்டும்.
நாகரீகத்தில்
வளர்ச்சியடைந்த சமூகமாக கருதப்படும் தமிழ்
சமூகம், நவீன சிந்தனையில் பின்னோக்கி
பயணிக்கிறதோ என்ற அச்சம் வருகிறது.
புற அழகியலையே உண்மையென நம்பி, அக அழகியல்
நம்ப மறுப்பதெனோ!!!
திறமையை
கொண்டாடுகள்!!!
திறமை யெனும் போலி பிம்பத்தை
அல்ல!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்

முதலாளியை நடித்தால், பொருள்கள் விற்பனையாகும். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எனவே செய்யும் செயல் அதற்குரிய பயன் தராது.
ReplyDeleteமுதலாளியே நடிக்கக் கூடாது.
ReplyDelete