” பொண்ணுங்கள கண்ட்ரோல்
பண்றது தான் கஷ்டம்... ஆனா... கம்பியூஸ் பண்றது ரொம்ப ஈசி “
இந்த வசனம்....
ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் தான் அது....
இந்த வசனத்தை,
முதன் முதலில் கேட்கும் போது... “ சூப்பர இருக்கு... உண்மை தானே!! “ என்று மனம் புல்லரித்து
போனது.
சில நாட்கள் கழித்து
யோசித்து பார்க்கும் போது... நான் எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது.
ஆணாதிக்க மனநிலையில், எதிர் பாலினத்தை குற்றம் சாட்டும் போது, உணர்ச்சி வேகத்தில் எதையும்
யோசிக்காமல் ... அனைத்தும் உண்மை என மனம் நம்பி விடுகிறது!!! பகுத்தறிவுக்கு கூட வேலை
செய்யவில்லை.
பெண் மட்டுமல்ல...
ஆணின் மனமும் குழம்பி போக கூடியது தான்!!!
பன்னொடும் காலமாகவே...
முடிவெடுக்க கூடிய இடத்தில், ஆண் இருந்து வருகிறான். ஆனால் பெண்ணாவள்... இன்றைய நிலையில்
முடிவெடுக்க தொடங்கியிருக்கிறாள். ஆதலால் ... சில குழப்பங்கள் வரலாம்.
மேலும்.. ஆண் எடுக்கும்
அனைத்தும் முடிவுகளும்... எப்போதும் சரியாக இருக்குமென்றும் சொல்ல இயலாது. சில தவறான
முடிவுகளும் எடுக்க வாய்ப்புண்டு; இத்தகைய சூழ்நிலை பெண்களுக்கும் ஏற்படும். இவையெல்லாம்
சராசரி மனிதனே தவறுகளே!!!
பொதுபுத்தியில்
எதையும் ஏற்க வேண்டாம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment