Thursday, July 28, 2016

புத்தக வாசிப்பின் நோக்கம் நிறைவேறுகிறதா???

தஞ்சாவூர் புத்தக கண்காட்சி சென்ற போது, ஒரு விஷயம் மனதில் ஓடியது. பல்வேறு தளங்களிலிருந்து பல்வேறு வகையான நூல்கள் எழுதப்பட்டு, பல்லாயிர கணக்கான நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இப்படியான எழுதப்பட்ட நூல்கள், எவ்வளவு மக்களை சென்றடைந்திருக்கும்... சில ஆயிரங்களை தாண்டலாம்.. சில நூல்கள் மட்டும் .... சில லட்ச பிரதிகள் விற்கும்... அதற்காக எழுதியவர்களையும் குறை சொல்லவில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்தியா போன்ற நாடுகளில் புத்தகம் வாசிப்பு குறைவாக்கத்தான் இருக்கும்.
என்னுடைய கேள்வி... அதை தாண்டியது!!!! அப்படியாக படித்தவர்களில், அப்புத்தகத்தின் உண்மையான கருத்தை, எத்தனை பேர் உள்வாங்கியிருப்பார்கள்... அதன்படி எத்தனை பேர் நடந்திருப்பார்கள்??
படித்தவர்களில்... நூற்றில் ஒருவரது பயனடைந்தால் போதும்!!! என்ற சால்சாப்பை, நாமும் சொல்லி கொண்டே கடந்திருப்போம்(என்னையும் சேர்த்து தான்)...
இவ்வாறாக பல புத்தகங்கள், மின் குப்பை போல் சேர்ந்திருக்குமே தவிர, சமூக மாற்றத்திற்கான பயனை அளிக்காது....
தனிமனித வளர்ச்சி, மத தீவிரவாதம், பொருளாதார சீர்கேடு, உலக அரசியல் போன்றவற்றால் சிக்குண்டு இருக்கிறோம்.. மறுபுறம், தொழிற்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம், அறிவியல் வளர்ச்சி என்றும் கூப்பாடு போட்டு கொண்டே வாழ்க்கையை கடந்து போய் விடுகிறோம்...
பல்லாண்டுகளாக இருந்த, பேனா முனையின் வலிமை வழக்கொழிந்து போவதை போல் தெரிகிறது...

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment