உயிரினங்கள்அனைத்தும்(மனிதன் உட்பட) நாடோடி வாழ்க்கையை சார்ந்தவை.. அதாவது இயற்கையோடு ஒன்றி, அதன் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று, தன் தேவைகளை நிறைவேற்றி கொள்வது எனலாம்..
ஆதிகாலத்தில் மனிதனும், நாடோடியாகவே வாழ்ந்தான். இவ்வாறாக இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப, இன்றும் பறவைகளும், விலங்குகளும், மீன்களும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மனிதன் தான், ஆறறிவு மிருகமாயிற்றே!!! கொஞ்சம் சிந்தித்தான்.. தன்னுடைய தேவைகளை, தன்னுடைய இருப்பிடத்திற்கே, கொண்டு வர முயற்சித்தான்/ முயற்சி செய்தும் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக, நாகரிகம் பிறந்தது.
அன்று ஆரம்பித்த சுற்று சூழலியல் மாறுபாடு, இன்றும் தொடர்கிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment