Tuesday, July 26, 2016

கவிதை- மயக்கம் என்ன??

’சில்லறை’ போதைகள்
சில்லறைத்தனமான மனதினால்….
எளியவனையும்
ஏளனம் செய்கிறது…..
பண மயக்கமாய்!!!!!
மானுடம் தளிர்க்கையிலே
மனிதம் கசங்குகிறது…..…
அதிகார போதையிலே
ஆணவம் தலையெடுக்கிறது…..
அரசியல் மயக்கமாய்!!!
அறிவை முடமாக்கி
ஆனந்த அக நிலைக்காக….
பெண்ணியத்தை பெயர்த்தெடுத்து
ஆண்மை அவளம் செய்கிறது
காம மயக்கமாய்!!!!!
தெளிந்த நீரோடையில்
கல்லெறியப்பட்ட அன்பினால்…..
அகம் தள்ளாடி
புறம் தள்ளாடாமல் தவிக்கிறது …
காதல் மயக்கமாய்!!!!!
எந்தன் தயக்கம்
என்னுள் மயக்கமாய் தழுவ…….
வார்த்தை போதைகள்
வாக்கியங்களாய் வடிவெடுக்கையில்…..
அறிவு ஆர்பரிக்காமல்
அழகு கவிதை வடிவமாய் படிமமெடுக்கிறது!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment