புல்வாமா
தாக்குதலை தொடர்ந்து நடக்கும் சமூக நிகழ்வுகள்…. சற்று
அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதை பற்றி எழுத
வேண்டாம் என்று கூட எண்ணியிருந்தேன்.
ஆனால் சமூக வலைதள பதிவுகள்
விடவில்லை..
போர் வருமா? வராதா ? என்று
விவாதங்கள் தொடங்கி விட்டன. மத்திய
அரசின் ஆலோசனையை விடவும்…. சமூக வலைதளங்கள் தொடங்கி,
டீக்கடை அரசியல் வரையும் ஆலோசனைகள்
அதிகமாக பிரதிபலிக்கின்றன. போர் வருவதற்கான வாய்ப்புகள்
மிகவும் குறைவு… ஏனெனில் வளரும்
பொருளாதார நிலையில் போர் மூண்டால் மிகப்பெரிய
வீழ்ச்சியை இரு நாடுகளும் சந்திக்கும்.
அதிலும் பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு
மிக குறைவாக இருக்கிறது. ஆதலால்
பேச்சு வார்த்தையை பாகிஸ்தானும் விரும்புகிறேன்..
ஆனாலும்…
இருநாடுகளும் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்தி கொள்வதற்காக
சிறிய எதிர்ப்பை தாக்குதல் மூலம் காட்டி கொண்டிருக்கின்றன.
பாதுகாப்பு
சார்ந்த விஷயங்களை எல்லாவற்றையும் போது மேடைகளில் சொல்லி
கொண்டிருக்க முடியாது. இது மாதிரி தருணங்களில்,
பொது மக்கள் நாம் செய்ய
வேண்டியதெல்லாம் அமைதி காப்பது மட்டுமே!!!
அரசிற்கு துணை நிற்பது மட்டுமே!!!
அதை விடுத்து அனைத்தும் அரசியலாக மாற்றப்பட்டு பேசுவது அபத்தமாய் தெரிகிறது.
அதிலும் தேர்தல் நெருங்கிற தருணத்தினால்
நிலைமை…. இன்னும் மோசமாகவே இருக்கிறது.
பாகிஸ்தான்
பன்னெடும் காலமாக தீவிரவாத அமைப்புகள்
ஊக்குவித்து வந்துள்ளது. இராணுவம் சார்ந்த ஆட்சியே நடக்கிறது.
இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள
வேண்டும். இதையெல்லாம் புரியாமல் பிதற்றுவது ஏனோ??? புரியவில்லை.
எந்த பிரச்சனையிற்கு வன்முறை தீர்வாகாது. அந்த
கொள்கையை பல தருணங்களில் இந்தியா
நிருபித்துள்ளது. அந்த நிலையே தொடர
வாய்ப்புகள் அதிகம்!!! அதை விடுத்து… இத்தருணத்தில்
பொறுப்பற்று பேசும் மூடர்கள் கண்டு
அழுவதா??? சிரிப்பதா??? என்று தெரியவில்லை….
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment