எனக்கு தெரிந்த ஒருவர்.... கோவில்களில் அன்னதானம் வழங்குவார்.... கோவில் கலைநிகழ்ச்சிகளை கொடையாக செய்வார்..... இத்யாதி பல பொது நல செயல்களுக்கு செலவு செய்வதில் வல்லவர் (பிற்காலத்தில் தொழில் நஷ்டம் அடைந்தார் என்பது வேறு கதை).
பொது மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற நோக்கில் செய்கிறீராம். இது நல்ல காரியம் தானே??? இதுல என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம்.
அவரது சொந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை. அதாவது ..... அவருடைய பணியாளர்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்தை.... பொதுநலன் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடி கொள்கிறார்..
இது மாதிரியான செயல்களை செய்யும்.... பல்லாயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் நீங்கள் சந்திக்கலாம் . குறுகிய காலத்தில் பெரும் பணமுதலைகளாக உருவெடுத்தவர்களின் பின்புலம்.... இதுவாகத்தான் இருக்கும் (விதிவிலக்குகளும் உண்டு).
இந்த நிகழ்வு தொழிலதிபர்கள் மட்டுமல்ல... தனக்கு கொடுக்கப்படும் ஊதியத்திற்கு ஏற்ப பணிகள் செய்யாத நபர்களும் அடக்கம் தான்!!!! இத்யாதி நபர்கள்... பொதுநல சேவைகளை செய்ய மாட்டார்கள் . மாறாக.... கோயில் ... கோயிலாக/மடமாக அலைந்து கொண்டிருப்பர்... வேறு வகையில் மகிழ்ச்சியை பெற விழைவர்.
இத்தகைய காரியங்களை எல்லாம்... ”இரண்டங்கட்டி வேலை...” எனலாம். உங்களது பணியை ஒழுங்காய் செய்திருந்தால்... வேறொரிடத்தில் போலி பிம்பமும் தேவைப்படாது. ... வேறொரிடத்தில் சந்தோஷத்தை தேடும் அவசியமும் இருக்காது.... எதையும் இழக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment