Thursday, August 11, 2016

சமூக வரையறைகளும், பொருளாதாரமும்

அப்பா/ அம்மா கிராமத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். ஆனால் மகனோ/மகளோ நகரத்தில் நவநாகரீக உடையணிந்து, உயர் தர உணவத்தில் உணவருந்தி, நவ நாகரீக வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருப்பார்கள். (இப்படியாக வாழ்வது... அவர்களது தனிப்பட்ட உரிமையென்றாலும், பெற்றோரின் கஷ்டங்களை எண்ணும் போது வருத்தமே மிஞ்சுகிறது).
இத்தகைய சூழ்நிலையிற்கு... அவர்கள் மட்டுமே முழுமையான காரணமில்லை என்றாலும், ஒரு வகையில்... அவர்களும் காரணம் தான்.
நவ நாகரீக உலகம்... சில செயல்களை, சமூகத்தின் உயறிய அடையாளங்களாய் வகைப்படுத்தியுள்ளது. அதிக விலையுள்ள உடை அணிவது, உயர்தர அசைவ உணவு, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது, கூலிங் கிளாஸ் அணிவது, காபி டேவில் டீ சாப்பிடுவது, மாயா ஜாலில் படம் பார்ப்பது, ஆண்ட்ராய்டு/ஆப்பிள் போன் வைத்திருப்பது... இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
சமூகத்தினால் பொருளாதார, சாதிய, மத ரீதியாக பின் தங்கியவர்கள்...... தன்னை சமூகத்தில் முன்னிறுத்தி கொள்ள, ஒவ்வொரு நொடியும் முயன்று கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பயணம் நீண்ட நெடியது. அதற்கு பொறுமையில்லாமல், மேற்கண்ட செயல்களை செய்வதன் மூலம், தன்னையும் சமூகத்தில் தற்காலிகமாக நிலைநிறுத்த முயற்சி செய்வார்கள்.
மேற்கண்ட சிற்றின்ப செயல்களே, சமூகத்தினால் மதிக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை, இன்றைய திரைப்படங்கள், நவீன் பொருளாதார யுகம் செவ்வனே செய்து முடிக்கிறது. அதற்குள் இளைஞர்/இளைநி அகப்பட்டு கொள்கிறார்.
இளமையில் தான் சந்தோஷமாக இருக்க முடியும். திருமணமமான உடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்ற சொல்லாடல்களும்.. மேற்கண்ட செயல்களை அதிகமாக்கி கொண்டே செல்கிறது.
சந்தோஷத்தை தன்னுடைய மனங்களில் தேடாமல்.... மற்றவரின் மனம் சொல்லும் சந்தோஷத்தை, தன் சந்தோஷமாக எடுத்து கொள்கிறார்கள். புரிந்து கொள்வதில் தான் பிரச்சனையே தவிர, வேறொன்றுமில்லை!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்’
வேதை குமார்

No comments:

Post a Comment