சித்த மருத்துவம், நவீன ஆய்வுகளுக்கு உட்படவில்லை என்பது அறிவியலாளர்களின் கருத்து. சித்த மருத்துவம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. ஆதலால், நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்துவது கடினம்/ உட்படுத்துவது தேவையில்லாதது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இவ்வாறான வார்த்தை போர்கள், தினந்தோறும் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் சண்டை போல் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
என்னை பொறுத்தவரை, சித்த மருத்துவத்தை நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றே சொல்வேன்.(ஆனால்... அதற்கான கட்டமைப்பும் பணபலமும்அறிவியாலாளர்களும், நம்மிடம் தற்போதில்லை என்பது நிதர்சன உண்மையும் கூட). இல்லையேல், நவீன உலகத்தின் பார்வையிலிருந்து, சித்த மருத்துவம் எளிதாக புறக்கணிக்க படும்!!!!
ஆனால்... அத்தகைய ஆய்வுகளுக்கு முன்னர், சித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய களப் பணிகள் ஏராளம். ” சித்த மருத்துவம், தத்துவத்தை அடிப்படையாக கொண்டது “ என்று சொல்லி கொண்டு காலம் கடத்துகிறோம். ஆனால், “ தத்துவம் சார்ந்த ஆய்வுகளை எந்தவளவிற்கு முன்னெடுத்து செல்கிறோம்??? ...” என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.
ஒரு முதுநிலை மருத்துவர், ” மூட்டுவலிக்கு x என்ற மருந்து சிறப்பாக வேலை செய்கிறது...” என்று சொன்னால்.... அதை அப்படியே பின்பற்றுவோம். அல்லது analgesic, anti-arthritic anti-inflammatory anti-rheumatic க்காக வேலை செய்யுமா??? என்று யோசிப்பமோ தவிர, வாதத்தை குறைக்குமா?? அதிலுள்ள உள்ள மூலிகையின் சுவை என்ன?? வீரியம் விபாகம் என்ன??? என்ற சிந்தனையெல்லாம் வராது....(மாறாக... நீங்கள் அப்படி தான் யோசிக்கிறீர்கள் என்றால்... என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்)
நம்முடைய மருத்துவ நூல்களில், எவ்வளவோ.... அனுபவ குறிப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம், அதன் சுவை என்ன?? என்ன குற்றத்தை கட்டுபடுத்தும்/நீக்கும்??? எந்த உடலிற்கு கொடுக்கலாம்???? என்ற தத்துவ ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தினால்... நல்லதொரு ஆராய்ச்சியின் தொடக்கமாக அமையும்.
நமது சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும்... ஆராய்ச்சியின் தொடக்கம்.. உங்களின் தத்துவத்திலிருந்தே தொடங்குங்கள்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment