பழையன கழிதலும், புதியன புகுதலும் போகியின்
சிறப்பு... சரி நம்மையும் மாற்றலாம்
பார்த்த... முடியாது போலும்!!! நம்முடைய உடலமைப்பு மாற்ற இயலாது!! குணத்தையும்
மாற்ற இயலாது!!! முடிந்தளவிற்கு செயலை மட்டும் புதுமையாக்குவோம்!!!
-------------------------------------------------------------------------
பழையவற்றை
தீக்கிரையாக்கி, சுற்று புறத்தை மாசாக்குவதே
போகி என்பது போன்ற சில
பதிவுகளை காண்கிறேன். நம்முடைய எண்ணங்களை... இந்தளவிற்கு சுருக்கி கொண்டோமே... என்ற எண்ணுவதை தவிர,
வேறொன்றுமில்லை!!!
நவீன நுகர்வு உலகம், தேவையற்ற
பல பொருட்களை நம்முள் விதைத்து... அதன்
அறுவடையாகவே, இன்றைய மாசான சுழலை
உருவாக்கியுள்ளது. அதனையும் இன்றைய தமிழ் சமூகமும்
ஏற்று கொண்டதன் பின் விளைவே இவையெல்லாம்!!!
அதை விடுத்து, சுற்று புற சூழலை
மாசாக்கிறது என்ற கருத்தியலை மட்டும்
வைத்து பகடி செய்வதில் பலன்
ஏதே!!!
நகரமயமாக்கத்தின்
விளைவாக, பொருட்களை புதைப்பதற்கு கூட இடமில்லாமல், எரித்து
விடும் அளவிற்கு, நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது
தினந்தோறும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசை விட அதிகமா
என்ன??
சீனாவிலும்
டெல்லியிலும் போகி பண்டிகை கொண்டாட்டத்தின்
போது தான், இவ்வளவு மோசமான
மாசான நிலை ஏற்பட்டது போலும்!!!
தமிழர்
பண்பாட்டின் விழா என்ற ஒரே
காரணத்திற்காக மட்டுமே... நான் இதை கூறவில்லை!!!
நவீனத்தின் பாதிப்பை, இத்தருணத்தோடு முடிச்சிட்டு வாதிடவதே தவறு என்கிறேன்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment