Friday, January 6, 2017

கிரிக்கெட் கேப்டன் - தோனி/கோலி

ஒரு அணியை வழிநடத்தி செல்வதில்இரண்டு வகையே உள்ளது. ஒன்று கட்டுபாடான, ஆக்ரோஷமான நிலை; மற்றொன்று- அமைதியான நிலை. இந்த இரு நிலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியை கண்டுள்ளது.

இதில் எது சிறந்தது??? “ என்ற விவாதமெல்லாம் நிச்சயமாக தேவையில்லை. ஏனெனில்.. இத்தகைய தலைமை பண்பு என்பது காலத்திற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவை.

காலத்திற்கு ஏற்ப மாற கூடிய தன்மை என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு, மற்றொரு அணுகுமுறை உள்ள தலைமை தேவைப்படும். இந்த கால இடைவெளியை தாண்டும் போது, அணி தலைவன் என்பவர், தலைமை பொறுப்பிலிருந்து விலகி விடுவது நல்லது.

இத்தகைய புரிதலை, தோனி நன்றாக புரிந்துள்ளார் என்பேன். அதனால் தான், ஒரு நாள் போட்டியில் தலைமை பொறுப்பிலிருந்து விலகி விட்டார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில், சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான், தோனியின் மீது பல விமர்சன கணைகள் வந்தன.

அணி தலைவன் என்ற முறையில் , தோனி சற்று அமைதியாக கையாள கூடியவர். ஆனால், அதற்கு நேர் எதிர் மாறாக, ஆக்ரோஷமாக கையாள கூடியவர் கங்குலி!!! இப்போது தலைமை ஏற்றிருக்கும் கோலியும் ஆக்ரோஷ மனநிலைக்கு சொந்தக்காரர் தான்!!

நான் அறிந்த கிரிக்கெட்டில், கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகியோர் சிறந்த அணி தலைவராகவே வலம், வந்தனர். ஆனால் அசாருதீன், டெண்டுல்கர் மற்றும் டிராவிட் போன்றோர் சற்று சறுக்கினார்கள்; ஆனால் நல்ல விளையாட்டு வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை!!!

ஆனாலும்….. ” அணி தலைவன் மட்டுமே வெற்றியை தந்து விட முடியாதுஎன்பது என்னுடைய நம்பிக்கை. கள வீரர்களின் திறனும் முக்கியம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment