அரசு பேருந்தில்
ஜம்மென்று ஒரு பயணம்,
ஜன்னலோர சீட்டு கூட
என்னமோ மனம் லயிக்கவில்லை…….
சென்னையை விட்டு
சொந்த ஊருக்கு திரும்புகையில்
எதோ மனதில்
ஒரு நெருடல்…………………
பேருந்தின் சக்கரங்கள்
முன்னோக்கி பாய
எனது மனம்
பின்னோக்கி பாய்கிறது….
பத்து வருடத்திற்கு
முன்னரும்
இதோ மாதிரி ஒரு பயணம்
சென்னைக்கு போகிறோம்
மருத்துவராக போகிறோம்
என்ற கர்வத்தோட …………
சென்னை மாநகரம்
பிரித்து பார்த்தது போல
என்னுள்
ஏதோ ஓர் உணர்வு….
ஒவ்வொரு நிமிடமும்
எத்தனை நிகழ்வுகள்
ஏதோ ஒன்றை
உணர்த்த முயன்றன
கால சக்கரங்கள்
உருண்டோடின ………
கால தேவன்
என்னை
ஏதோ கலங்கடித்தான்…..
சந்தோஷத்தின் அளவுகள்
வேறு மாதிரியாக
இருந்தன…..
வெளி வாழ்க்கை
வேறு கிரகத்திற்கு
போய் விட்டோமோ
என்று எண்ணின………..
வாழ்க்கையின்
கேள்விகள் பல……
கேள்விகள் புரியவில்லை
விடைகள் தெரியவில்லை
பரீட்சையை போல….
விடைகளை தேடினேன்
அன்பர்கள் வழியே….
நண்பர்கள்
என்ற ஒற்றை வரியில்…..
கிறுக்கலான விடைகளுடன்….
சுற்றுலா…..
நண்பர்கள் வீடு….
தியேட்டர்….
ஹோட்டல்…..
பீச்……
ஆயுத பூஜை கொண்டாட்டம்….
ஹாஸ்டல்…..
……இப்படி பல
நிகழ்பட சுருள்கள்
மெய் பிம்பங்களாவே தெரிகிறது…..
”டிக்கெட் சார்?????”
என்ற ஒற்றை வரியில்
திரைச்சீலை முடி
நினைவலையை
தவிடு பொடியாக்கியது…….
கடந்த கால
வருத்தங்கள்……
சந்தோஷங்கள்……
இரண்டுமே……
நிகழ் காலத்தில்
நெகிழ்ச்சி தரவல்லவை……….
எதிர்காலத்தை
நினைத்து பயந்தாலும்
எதோ ஒர்
நம்பிக்கையில்
பயணம் தொடர்ந்து
தொடர்ந்து கொண்டு இருக்கிறது…..
ECR பாதையில்
இதமான காற்றில்
மெல்லிய இசையில்
கண் இமையை மூடி
மன கதவையும் தாழிட்டு
உறக்கத்தையும் தேடின……..
அன்(நண்)பர் பிரிவில்
ஆயிரம் அர்த்தங்கள்………
மனதில்
ஆயிரம் வருத்தங்கள்……
நாளைய விடியல்
நல்லவையே…..
நினைவலையின்
நிழல் படச்சுருள்
No comments:
Post a Comment