Friday, June 14, 2019

முதலாளி/ தொழிலாளி விகிதம்


இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாக்கவும், சிறுபான்மை நலனை பேணவும், பலகட்சி ஆட்சி முறை கொண்டு வரப்பட்டது.

ஆனால்.... இன்றைய புரிதலில்.... பல கட்சி ஆட்சி முறையின் புரிதலே மாறி விட்டது. அதுவே சமூகத்தின் பன்முக தன்மையை வைத்தும், சிறுபான்மை/பெரும்பான்மையை வைத்தும், பிரிவினை தன்மைகள் அதிகமாகி கொண்டே போகிறதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அதிகார மோதல், பண பலம், சாதிய பூசல், பதவி கிடைக்காமை என பல்வேறான காரணங்களுக்காக கட்சிகள் உடைந்து, எண்ணிக்கைகள் பெருக்கல் விகிதத்தில் அதிகமாகி வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும் போது தான், கட்சிகளின் எண்ணிக்கையை அறிய முடிகிறது.

நிற்க...... இன்றைய சூழ்நிலையில் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அத்தகைய வணிக நிறுவனங்களுக்கான தேவையை யோசிக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது..

மேற்கண்டவாறு புதிய அரசியல் கட்சிகள் உதயத்திற்கும், புதிய வணிக நிறுவங்களின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே உணர்கிறது,

இரண்டிலும்.... மறைமுகமாக தலைவனாக கட்டி கொள்ளவே முயற்சி செய்கிறார்கள். உளவியலில் ரீதியாக மனித மனங்கள் பெரியளவு மாற்றங்களை அடைந்துள்ளது. முன்பெல்லாம், மற்றவரை தலைவராக/முதலாளியாக ஏற்று கொள்ளும் மனநிலை இருந்தது. இன்று..... “நானே பெரிய ஆள், எனக்கு கீழே தான் அனைவரும்!!!! நான் செய்வது அனைத்தும் சரியானவை!!! “ என்ற புரிதலற்ற மனநிலையே!!!!!

எல்லா காலத்திலும், எந்த சமூகத்திலும் தலைவனின் எண்ணிக்கை பிரமிட்டின் உச்சி போன்று எண்ணிக்கை குறைவாகவும், தொழிலாளிகள் பிரமிட்டின் அடிப்பரப்பை போன்று அதிகமாகவும் இருக்க வேண்டும்!!!

மாறாக.... முதலாளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது!!! சுய தொழில் செய்வதும், சுய சார்பு தன்மை சமூகத்திற்கு நல்லது என்றாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டுவதும் சமூகத்தின் மோசமாக குறியீடே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்


No comments:

Post a Comment