கடந்த வாரம் தேனி வரைக்கு செல்ல வேண்டி இருந்தது. வாடகை காரில் காலையிலேயே பயணத்தை ஆரம்பித்து விட்டோம். சுமார்
350 கிமீ பயணம்!!! வேதாரண்யம்- சென்னை சென்று வரும் தூரம்!!! சுமார் 6 மணி நேரத்தில் சென்றாகி விட்டது. தேசிய நெடுஞ்சாலை அனைத்தும் அருமை!!!!
ஒவ்வொரு நாடும் வளர்ச்சி அடைவதற்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமானது. அதில் ஒன்று சாலை!!!
உலக அளவில் சாலை அடர்த்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இவ்வளவு தூரம் சென்றால் டோல்கேட் வராமல் இருக்குமா என்ன?? வழியில் மொத்தம் மூன்று டோல்கேட்!!! இரண்டு மட்டும் உபயோகத்தில் இருந்தது. சாலை பணிகள் நடைபெற்று வருவதால், மற்றொன்று மூடப்பட்டு இருந்தது.
” வண்டிகளுக்கு தான்..... வரி செலுத்துகிறமோ??? அப்புறம் எதுக்கு டோல் கட்டணும் “ என்பது பெரும்பாலனோர் வாதம். தேசிய நெடுஞ்சாலைகளை முழுவதும் அரசினால் உருவாக்க முடியாத காரணத்தால், PPP( அரசு-தனியார் பங்களிப்பு) என்பதில் BOT(Build Operate Tansfer ) என்ற முறையை பின்பற்றி வருகிறது.
ஒரு தனியார் நிறுவனம் முதலீடு செய்து சாலையை அமைக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு சாலையை நிர்வகித்து, டோலையும் பெற்று கொண்டு, மீண்டும் அரசிடமே அளிக்கும். இதே மாதிரியை தமிழ்நாடு அரசும் Tnrdc என்ற நிறுவனத்தின் மூலம் பின்பற்றி வருகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம்!!! காரில் Fastag ஒட்டியிருந்ததால் போகும் போது பிரச்சனையில்லை. ஆனால் திரும்பி வரும் போது, உங்கள் Fastag ப்ளாக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள். வாடகை கார் என்பதால்.... Fastag குறித்த தகவல்கள் வேறொருவரிடம் இருந்ததால்.... பணத்தை கட்ட வேண்டியதாகி விட்டது.
இந்த தருணத்தில்.... செங்கல்பட்டு சுங்கசாவடியில் நடந்த பிரச்சனை நினைவில் வந்து சென்றது.
பொதுமக்கள் எல்லா இடங்களிலும் பிரச்சனை பண்ண மாட்டார்கள். ஆனால் பொதுமக்களும். நேரடியாக களத்தில் இறங்கும் போது உள்ள தார்மீகத்தை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்ட காலத்தில், டோல்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் பெறும் வருமானமும் அதிகமாகவே இருக்கும். தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் கால அளவு பொது வெளியில் வைத்தால் நல்லது!!! கட்டணத்தை குறைத்தால் நல்லது!!!
இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது போல்.... மக்களின் அன்றாட தேவை பயன்படும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கலாம்.
பயணிக்கும் நேரம் குறைவு என்றாலும், அதீத கட்டணங்கள் எனும் போது... எதிர்ப்பு வருவதை தவிர்க்க இயலாது. கூகுள் மேப் கூட டோல் இல்லாத சாலை என்ற வழியை காட்ட ஆரம்பித்து விட்டது.
நடுத்தர மக்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment