Wednesday, January 29, 2020

கல்லூரி படிப்பும் உண்மை நிலையும்

டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழில், தமிழ்நாட்டு பிஹெடி தொழிற்சாலைகள் என்ற தலைப்பில் கட்டுரை வந்தது. இது ஒன்றும் புதிதல்ல!!! உயர் கல்வி துறையில் சிறந்த மாநிலம் என தமிழ்நாடு என்று பறைசாற்றி கொண்டிருக்கிறோம்!! ஆனால் தரமான கல்வி தருகிறமோ?? என்று கேள்வி வரும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பள்ளி கல்வியை முடித்து, உயர்கல்வி பெறும் மாணக்கர்களின் எண்ணிக்கை 49 % உள்ளது. சுமார் 20-30 மருத்துவ கல்லூரிகளும், 550 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகள் அனைத்தும், சுமார் 20-30 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தது.

தமிழகத்தில் தகவல் தொழிற்நுட்ப துறையை போல், அதீத வளர்ச்சி பெற்ற துறைகளில், உயர் கல்வி துறையும் ஒன்று!!!!(தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும் அப்படி தான்) ஒரு துறை வளர்ச்சி அடையும் போது.. .அத்துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்!!! அதில் முக்கியமாக பார்க்கும் போது, தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்கள்!!!

உண்மையை உடைத்து பேசுவோமானால்...... கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்களில்.... ஆசிரிய பணியை விரும்பி தேர்ந்தெடுத்தவர்கள் வெகு சிலரே!!! (பள்ளிகளில் இதே நிலை உண்டு) . பள்ளிகளில் கூட B.Ed என்ற அடிப்படை தகுதியை வைத்திருக்கார்கள் .ஆனால் கல்லூரிகளில் M.Phil அல்லது P.hD என்பவை தகுதிகளாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு துறை சார்ந்த கல்வியை கற்பது/சார்ந்த அறிவை பெற்றிருப்பது ஒரு புறம்!!! அதை கற்பித்தல் என்பது மற்றொரு புறம்!!! இக்கருத்தில் பலபேருக்கு மாற்று கருத்து இருக்கலாம். இதில் உள்ள பிரச்சனையை, நான் பலதருணங்களில் அனுபவித்து இருக்கிறேன். இதனால் தான்... எனக்கு ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு வந்து விட்டது !!!

ஆசிரியர்/பேராசிரியர்களுக்கு வைக்கப்படும் தேர்வுகளும் மானப்பாடம் செய்து ஒப்புவிப்பதை போன்று அமைகின்றன. மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை ஆய்வு செய்வதே கிடையாது!! அதையும் போட்டி தேர்வுகளில் சேர்க்க வேண்டும்.

என் புரிதலில்....... ஆசிரியர் என்பவர்..... ஒரு துறை சார்ந்த அறிவை மாணவர்களுக்கு புரியும்படி போதிக்க வேண்டும்!!! துறை சார்ந்த ஆர்வத்தை துண்ட வேண்டும்!!! துறை சார் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்!!! ஆனால் நிஜத்தில் நடப்பது நேர் எதிரான நிலை!!! போலி பிம்பங்களுக்கு கைத்தட்டி ஆராதனை செய்து கொண்டிருப்பவர் அதிகம்!!!

பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மெட் வீக்என்ற வடிவேல் காமெடி உண்டு. ஒரு கட்டத்தின் அஸ்திவாரம் நன்றாக இல்லையென்றால்... அக்கட்டத்தின் நிலைத்தன்மை கேள்வி குறியே!!! அது போல்... ஒரு துறையின் அடிப்படை அறிவை தரும் கல்வி நிறுவனங்கள் கற்பிக்க தவறும் போது.... துறையின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. இது சித்த மருத்துவத்திற்கு பொருந்தும்

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்


No comments:

Post a Comment