Wednesday, January 1, 2020

மீளாய்வு 2019

2019 ஆண்டில் மட்டும்........ சுமார் 12000 கிமீ தூரம் இருசக்கர வாகனத்தில் கடந்திருக்கிறேன். இது மட்டுமல்லாமல் வெளியூர் பயணங்களும் அதிகம்!!! ஆனால் நடைபயிற்சியோ !!! உடலுழைப்போ குறைவு தான்!!! பெரும்பாலான பொழுதுகள்....... உடலுழைப்பு குறைந்து, மன உழைப்பு அதிகமாகியே கடந்தது!!! யோகா செய்து மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

2019 ஆம் ஆண்டில்..... மற்ற ஆண்டினை போல் சராசரி ஆண்டாகவே கடந்தது. கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், 2019 பிறந்து விட்டது. கால சக்கரம்.... வேகமாக உருண்டோடி 2019 முடிந்து விட்டது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவினை, சுமார் 4.25 லட்சம் செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டது. ஆண்டில் தொடக்கத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு!!! வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டிணம் ஆகிய இரு பிரிவுகளிலும் , நோயாளர் வருகை சற்று அதிகமாகி உள்ளது. தனி பயிற்சி மந்த நிலை ஏற்பட்டு, இமயம் சித்தா கிளினிக்கினை பூட்டு போட்டாச்சு!!! பிரபு மெடிக்கல்ஸில் வாரம் இருமுறை வருகையாக மாறி விட்டது.

இந்த வருடம் வெளியூர் பயணங்கள் அதிகம்!!! மதுரை மெட்டிசா ஹாலில் நடந்த மருத்துவ கண்காட்சிக்கும், சங்க வருடாந்திர கூட்டத்திற்கு நண்பர்களோடு சென்று வந்தேன்!!! இம்பகாம்ஸ் கூட்டத்திற்கு நான்கு சக்கர வாகனத்தில் சென்று, சூட்கோஸோடு திரும்பினோம்!!! அம்மா மகப்பேறு திட்ட பயிற்சி, வர்ம பயிற்சி, நோயாளர் பதிவை இணையத்தில் பதிவிடுதல் பயிற்சி என அலுவல் ரீதியாகவும் சென்னை பயணம் அமைந்தது.

சாய்ராம் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கு சென்று.... வளர்ச்சியை கண்டு வியந்தும்..... நண்பர்களை கண்டும் உளம் களிந்து வந்தேன். அம்பேத்கார் நந்தராஜா திருமணத்திற்காக கள்ளக்குறிச்சி கூட சென்று வந்தேன்.

புதிதாக கம்யூட்டர் மற்றும் பிரிண்டர் மட்டும் வாங்கினேன். செல்போன் டிஸ்பிலே ரிப்பேரான போதும்... .சரிசெய்து இந்த வருடத்தினை ஒட்டி விட்டேன். புத்தகங்கள் வாங்குவது கூட குறைந்து விட்டது( வாங்கிய புத்தகத்தை முதல்ல படி... பிறகு வாங்கிகலாம் என்று மனசாட்சி உறுத்தியதால்).

புத்தகம் வாசிப்பு முழுவதும் குறைந்து விட்டது. மீண்டும் அதிகப்படுத்த வேண்டும். அதே சமயத்தில்.... போட்டி தேர்வுகளுக்கு நடத்துவதற்காக... இன்னும் ஆழமாய் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

போட்டி தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுப்பது தொடர்கிறது. அதோடு மாதிரி நேர்முக தேர்வும் நடத்தினோம்!!!!!!! போட்டி தேர்வுகளுக்கு பாடம் எடுப்பதிலிருந்து விடுதலை அளிக்கலாம் என்றால் காலம் விடவில்லை!! சில மாதங்களில் இறுதி விழா நடத்தி விட வேண்டும்!!! பார்ப்போம்!!

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்விற்காக... சுமார் 30 க்கு மேற்பட்ட இடங்களில் நிலவேம்பு வழங்கும் பணியும் நடைபெற்றது. வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தகட்டூர் அரசு மேனிலை பள்ளி ஆகிய இரண்டிலும், நாட்டு நலப்பணி திட்ட முகாம் சிறப்புரை ஆற்றினேன். தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, தோப்புத்துறை அரசு மேல்நிலை பள்ளியிலும் சிறப்புரை யாற்றினேன். சீதாலெட்சுமி உதவி உயர்நிலை பள்ளியில், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரூரைக்கு வாய்ப்பு கிட்டியது.

முகநூலில் எழுதுவது குறைந்து விடுகிறது. நேரமின்மையும் முழுமையற்ற எழுத்து சிறப்பாக இருக்காதே என்ற எண்ணம் தான்!!! வேறொன்றுமில்லை!!!

வருடத்தின் பல வார இறுதிகள்... விடுமுறை களற்றே கடந்தது. அதை குறித்த கவலையில்லை!!! இன்னும் சாதிக்க வேண்டியதும் கற்ற வேண்டியதும் அதிகம் என்பதை மட்டும்... ஒவ்வொரு ஆண்டும் சொல்லி கொண்டே இருக்கிறது.

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்


No comments:

Post a Comment