Monday, January 13, 2020

சித்த மருத்துவமும் தமிழ் மருத்துவமும்

” சித்த மருத்துவம் என்றால் சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் ” என்பது பொது சொல்லாடல்!!! இது உண்மையா?? என்ற கேள்வி அடிக்கடி வந்து மறைகிறது.

இதெல்லாம் ஒரு கேள்வியா?? என்று கூட தோன்றலாம். சித்தர்களை சந்தேக்கிறாயா?? என்று கூட நினைத்து கொள்ளுங்கள்!!! தவறில்லை!!!

சித்தர்கள் அனைவரும், சித்த மருத்துவத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. சிலர் யோகம், ஞானம், வாதம் என்ற நிலையில் மட்டும் இருந்தவர்களும் உண்டு!!! அதற்கு அவர்கள் எழுதிய செய்யுளே ஆதாரம்!! அது போல்....... சித்த மருத்துவத்தினை சித்தர் மட்டுமே உருவாக்கினார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!!

அப்படியென்றால்...சித்த மருத்துவத்தில் சித்தர் பங்கில்லையா?? என்று நீங்கள் கேட்கலாம். சித்த மருத்துவத்தில் சித்தர்களின் பங்கும் அளப்பரியது என்பது என்னுடைய புரிதல்!!!

சித்த மருத்துவத்தின் வரலாற்றை பேசும் போது...... தமிழின் வரலாற்றை ஒப்பிட்டே பேசி வருகிறோம்!!! ஆனால் சித்தர்களின் கால வரையறையை வைத்து பேசும் போது.... சித்த மருத்துவத்தின் காலம் .....மிகவும் பின்னோக்கி (7 -14 நூற்றாண்டு வரை) செல்கிறது.

இது ஓருபுறம் இருக்க... சங்க கால நூல்களில் எதேனும் சித்த மருத்துவ சொற்கள் / கருத்துகள் இருக்கிறதா?? என்று தேடி பிடித்து கொண்டிருக்கிறோம்?? அதற்கு குறித்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்து விட்டது.

சரி..... உண்மையிலேயே 7 நூற்றாண்டு முன்பு.... சித்த மருத்துவமே இல்லையா??? என்று கேட்கலாம். அதற்கு முன்பு மருத்துவம் இருந்தது. அது சித்த மருத்துவம் என்று பெயரிடபடாமல் இருந்திருக்கலாம்!! அவ்வளவு தான்!!!

மனிதன் உயிர் வாழ தொடங்கிய காலம் முதல்.... மருத்துவ அறிவும் சேர்ந்தே வளர தொடங்கிற்று!! புரியும் படி சொல்லவேண்டுமானால்..... மூலிகை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று பல பெயரிட்டு அழைத்து கொள்ளலலாம்!!! (பராம்பரிய மருத்துவ அறிவு)

இத்தகைய பராம்பரிய மருத்துவ அறிவு, அனைத்தும் சமூகங்களிலும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சிலவை மட்டுமே... மருத்துவ முறையாக வளர்ந்து மரமாக நிற்கிறது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சீன மருத்துவம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்!!!

இது எவ்வாறின்...... பராம்பரிய மருத்துவ அறிவோடு.... மொழி வளமும்...... நாகரிக பலமும் இணையும் போது புதிய மருத்துவ முறையின் உருவாக்கத்தை தவிர்க்க முடியாதாகி விடுகிறது.

தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், நிலம் சார்ந்த பராம்பரிய மருத்துவ அறிவு, சித்தர்களின் கொடை என அனைத்தும் இணைந்து சித்த மருத்துவமாக உயர்ந்து நிற்கிறது. இதுவே எந்தன் புரிதல்!

No comments:

Post a Comment