==ஆசையே துன்பத்திற்கு காரணம்- புத்தர்======
எந்த ஒரு
பொருளின் அல்லது செயலின் மீதும் அதிகமாக ஆசை கொண்டால், அதிலிருந்து
நீ வெளிவருவதும் கடினம். அது இல்லாமல், உன்னாலும் வாழ
முடியாது. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது, அனுபவிக்கவும்
முடியாது
====அத்தனைக்கு ஆசைப்படு- ஜக்கி வாசு தேவ்=====
எந்த ஒரு ஒரு பொருளின்
அல்லது செயலின் மீதும் அதிகமாக ஆசை கொண்டால் தான், அந்த இலக்கை
அடைய முடியும். நீ விரும்புவதை பெற முடியும். உன் ஆசையை நிறைவேற்ற முடியும். நீ
வெற்றி அடைவாய்.......
இரண்டு பேரும்
ஆன்மிகத்தில் ஆய்வு பூண்டு மக்களின் செவ்வியல் வாழ்வினை மெருகேற்றியவர்கள். அப்படி
இருக்கையில் நாம் ஏதை பின்பற்றுவது???? ஆசை படுவதா??? ஆசையை வெறுப்பதா?
வாழ்வியல்
செயல்முறைகளை பல நேரங்களில் மனம் தான் நிர்ணயம் செய்கிறது. அப்படி பட்ட வேளையில், மனத்தின் தனமையை பொறுத்து வாழ்க்கை மாறும்.
அந்த மனவெழுச்சியின் இரு பக்கங்களை தான் , இரு ஆன்மிக
புலவர்களும் எடுத்து கூறுகின்றனர்.
மனிதனின் மனம்
பல விதங்களில் பறைசாற்ற கூடியவை. அவைகளை செம்மை படுத்த வேண்டியது மானுடனின் தேவை.
அதை நீங்கள் எந்த வகையில் செம்மை படுத்துகிறீர்கள் என்பது உங்கள் மனநிலையை
பொறுத்து அமையும். அவற்றின் இரு கோணங்கள் தான் இவை. ஆசையை வெறுப்பதா???? ஆசை படுவதா???? முடிவு உங்கள் கையில் ......
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment