போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கம் பகுதியில் புதிதாக
கட்டப்பட்டு வந்த இரண்டு 11 அடுக்கு மாடி கட்டிடங்களில் ஒன்று இடிந்து விழுந்து
தரை மட்டமானது. நேற்று மாலை நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து, விடிய
விடிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 26 பேருக்கு போரூர் அரசு மருத்துவமனையில் தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டுமான நிறுவனம் இடி தான் காரணமென இயற்கையின் மீது பழி
போட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை.
அவ்வாறு நடக்குமென கற்பனையாக வைத்து கொண்டாலும், இடிக்கே
தாங்காத கட்டிடத்தில் நாம் எப்படி குடியிருக்க முடியும்???
CMDA யும் அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை எனவும்
கூறுகிறது. எங்களிடம் மண் பரிசோதனை செய்து அனுமதி வழங்கும் அளவிற்கு தொழில்நுட்ப
அலுவலர்கள் இல்லை என்கிறது. சில வருடங்களுக்கு முன்னர், சென்னை
உயர் நீதிமன்றமும் கட்டிடங்கள் கட்டுவதில் உள்ள முறைகேடுகளை சுட்டி காட்டியும்
மாறவில்லை.
ஏரியின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் முற்காலத்தில் ஏரி
இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அப்படி இருக்கையில் அடிப்படை கட்டுமான சரியாக
போடாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அருகாமையிலே என்று விளம்பரம்
படுத்தும் கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டத்தை கை காட்டுகின்றன. அப்படிப்பட்ட கட்டுமான நிறுவனங்களை எவ்வகையில்
நம்புவது???
இந்தியாவில் போன்ற வளரும் நாடுகளில், அடிப்படை
கட்டமைப்பு வளர்ச்சி அதிகமாக வேண்டும் என்று சொல்ல கூடிய காலத்தில் , கட்டுமானம்
இப்படி இருக்கலாமா???
அரசாங்க ஊழியர்களை கேட்டால், ஆட்கள
பற்றாக்குறை, அதிகமான வேலைப்பளு, எங்களிடம்
தொழில் நுட்ப அலுவலகர்கள் இல்லை என்று ஏதாவது ஒரு பதிலை சொல்லி தப்பித்து
கொள்வார்கள்.
கடவுள் இயற்கையின் வழியே, அவ்வப்போது அரசாங்கத்திற்கு சுட்டி காட்டினாலும், தொடர்ந்து
தப்புகள் நடைபெற்று தான் வருகின்றன. தவிர்க்க முடியாத நிகழ்வை போல்
காட்சியளிக்கின்றன.
இது மாதிரியான நிகழ்வுகளில் பாதிக்கப்படுவது, ”சராசரி
மனித உயிர் தானே, நம் உயிரா என்ன???” என்ற
மனநிலையோடு மனிதன் வாழ்கின்றான். இரண்டு நாளைக்கு தொலைகாட்சியில் பார்த்தும்
பேப்பரில் படித்தும் விட்டு, உதட்டளவிலும் மனதளவிலும் ’உச்’ கொட்டி
விட்டு, அடுத்த நாளிலிருந்து சீரியலையும் கால்பந்தையும் சீரியஸ்
பார்க்க போய் விடுவார்கள். டாஸ்மார்க் கடையை அடுத்து எங்கு ஆரம்பிக்கலாம் என்று
அரசாங்கமும் தீவிரமான யோசனையில் இறங்கி விடும்.
இன்றைய நிகழ்வு(இறப்பு) ….நாளைய
வரலாறு ஆகலாம்….
ஆனால்… வரலாற்று பதிவில்…
.பாடம் கற்று கொள்ளாமல் இருந்தால்…பயனில்லை….
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment