Saturday, January 9, 2016

மகிழ்ச்சி எதை சார்ந்தது

மகிழ்ச்சி என்பது உள்ளம் சார்ந்தது. ஆனால் மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்கான காரணங்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அக காரணங்கள். மற்றொன்று புறக் காரணங்கள்.

மக்களின் பெரும்பாலானோர், புறத்திலிருந்து மட்டும், மகிழ்ச்சி கிடைப்பதாக நினைக்கின்றனர். அதாவது பணம் சாம்பாதிப்பது, பகட்டாக வாழ்வது, அதிகாரமாக வாழ்வது போன்றவற்றை சந்தோஷத்தின் எல்லைகளாக நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் பணத்தை நோக்கி ஒடி கொண்டிருக்கிறோம்.

மனிதர்களில் சிலர் மட்டுமே, அக காரணத்தை நோக்கி பயண ஒடத்தை செலுத்துகின்றனர். அதாவது ஆன்மிகம், தத்துவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள், அக காரணியால் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பெரும்பாலான மக்கள், இதில் ஒன்றும் மட்டுமே சந்தோஷத்தின் இடமாக கருதுகின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும். இரண்டும் கலந்த மையப்புள்ளியில் பயணிப்பது சால சிறந்தது.

பணத்தை பெற்றவன் அன்பை நோக்கி பயணிப்பதும், அன்பை பெற்றவன் பணத்தை நோக்கி பயணிப்பதும் இதனால் தான் நடக்கிறது. நீங்கள் மாற்றி கொள்ள வேண்டிய இடத்தை, இப்போதே தேர்ந்தெடுங்க நண்பர்களே!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment