Wednesday, January 27, 2016

குரு- மாணக்கர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்

ஆசிரியர்(குரு) எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்?? மாணவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்???

சற்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!!!

தான் தெரிந்த விஷயங்களை, மாணவனுக்கு கற்று கொடுப்பவர் ஆசிரியர் என்று நீங்கள் நினைத்தால், தவறு என்று கருதுகிறேன் . அதைப் போல், மாணவனும், ஆசிரியருக்கு தெரிந்ததை கற்று கொள்பவனல்ல.

சற்று ஆழமாய் சிந்தித்தால், இன்னொரு விஷயம் புலப்படும்.....

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை மாணவ பருவத்திலே கண்டறிந்து, அதனை முறையாக வெளிக்கொண்ர வேண்டிய கடமை, ஒவ்வொரு குருவிற்கு உண்டு. அதை போல், மாணவனும் தனக்குள் உள்ள திறமையை அறிந்து, அதில் சிறந்தவனாக தேர்ச்சி பெற குருவை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவை இரண்டும், இப்போதும் நடைபெறுவதில்லை.

மகா பாரதத்தில்,தூரோணச்சாரியர் இதை தெளிவாக கையாண்டார். நாடாளுவதற்கு உதிஷ்டனே சிறந்தவன் என்று கண்டறிந்து, அதற்கான குணநலன்களை மேம்படுத்தினார். அர்சுனனும், தன்னுள் உள்ள திறமையை கண்டறிந்து, குரு மூலமாக அதனை மேம்படுத்தினான்.

முடிந்தவரை நல்ல மாணவனை உருவாக்க முயற்சிப்போம்/ நல்ல மாணவனாய் இருக்க முயற்சிப்போம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment