என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், எனக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா??? என்று ஏங்கியது உண்டு. எனக்கு டைரியை கொடுக்க வேண்டிய
அவசியம் மற்றவருக்கு இருந்ததில்லை. எனக்கும் டைரியை எதற்காக பயன்படுத்த வேண்டும்
என்ற புரிதலும், இளம் பருவத்தில்
இருந்ததும் இல்லை.
கிளினிக் ஆரம்பித்த பிறகு, புத்தாண்டிற்கு பிறகு சில டைரிகள் கிடைப்பது வழக்கம். அதனை முழுமையாக
பயன்படுத்தவில்லை என்றாலும், அதனை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.
ஆனால், டைரியை பெற வேண்டும் என்ற
ஆர்வம் இப்போது குறைந்துள்ளது.
இது டைரியை பெறுவதில் மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா விஷயங்களும், இத்தகைய நிகழ்வுகள்
நடைபெறுவது உண்டு.
ஒன்றை பெறுவதில் உள்ள ஆர்வம், அது கிடைத்த பிறகு ஆர்வம் குறைந்து விடுகிறது அல்லது வேறென்றின் மீது
ஆர்வம் அதிகமாகி விடுகிறது.
காதல், திருமணம், அன்பு, பணம் இப்படியாக எல்லா
வாழ்க்கை நிந்தைகளிலும்,
இல்லாத போது உள்ள
ஏற்படும் ஆர்வம், அதை பெற்ற பின் குறைந்து
விடுகிறது.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ன ஆர்வத்திலும், நமக்கு கிடைக்காத ஒன்றை நோக்கிய பயணமே வாழ்க்கையின் சுவரசியத்தை
அதிகமாக்கின்றன!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment