கலைமகள்- இந்த பெயரை சரஸ்வதியின் வேறு பெயராக
கேட்டிருப்போம். ஆனால், சீனாவில் வாழும் பெண்மணியின் பெயர் இது. ஆச்சரியமாக
செய்தியாக இருந்தாலும் உண்மையான விஷயம். இவர், சீனாவில் உள்ள தமிழ் வானொலி
பிரிவில், தலைமை செயல் அலுவலராக பணி புரிந்து வருகிறார்.
சீன வானொலி, சுமார் 65 மொழிகளில் ஒளிப்பரப்பி வருகிறது. அதில் இந்தியாவில்
உள்ள நான்கு மொழிகளில் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அவை இந்தி, தமிழ், உருது மற்றும்
வங்கம். அவற்றில் தமிழ் மொழி வானொலி, 1963 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. சீன வானொலிக்கு வருகின்ற
விமர்சன கடிதங்களில்,தமிழ்க்கே முதலிடம் என்பது கூடுதல் தகவல்.
”கல் தோன்றா, மண் தோன்றா காலத்து மூத்த மொழி, தமிழ்மொழி என்று பெருமை பேசிக்
கொண்டிருக்கும் தமிழர்கள், தமிழ் மொழியை தூய்மையாக பேசுவதில்லை ” என்று
வருத்தப்படுகிறார் கலைமகள். இங்கு ஆங்கில் கலப்பில்லாமல், தூய்மையான தமிழில் பேசுவதாக
பெருமையாக கூறுகிறார். மேலும் கூறுகையில், “ ஆங்கில கலப்பால்,தமிழின்
பாரம்பரியத்தை மிக விரைவில் இழக்க கூடும் …” என்கிறார்.
கலைமகள் சீனா தமிழ் அகராதி ஒன்றையையும்
வெளியிட்டுள்ளார். அதோடு, ‘சீனாவில் இன்ப உலா’ என்ற மற்றொரு நூலை வெளியிட்டவர்.
இந்தியாவில் வானொலியின் பங்கு, வழக்கொழிந்த நிலையில், தகவல் தொழில்
நுட்பத்திற்கு ஏற்ப, இணையம், செல்போன் போன்றவற்றில் கேட்கவும் ஏற்பாடு செய்து
இருக்கிறார்கள். இதை இந்தியாவில் செய்ய முயற்சிக்கலாம்.
தமிழ் பிரிவில் வேலை செய்பவர்களில் பெரும்பாலனோர்
சீனர்கள் என்பது ஆச்சிரியமான செய்தி. அதில் இருவர் மட்டும் தமிழ்நாட்டை
சேர்ந்தவர்கள். மற்றவர்கள், தமிழ் மொழியை கற்று கொண்டவர்கள்.
வாணி, ஈஸ்வரி, சிவகாமி, ஜெயா, சரஸ்வதி, தேன்மொழி, வான்மதி, பூங்கோதை, ஓவியா, பூங்கோதை, இலக்கியா, மேகலா, நிறைமதி, கலைமணி, மீனா, மோகன்- இவையெல்லாம் ஏதோ சாமி பெயர்களோ அல்லது கவிதை
புத்தகத்தின் பெயரோ அல்ல. இங்கு பணியாற்றும் சீனர்களின் பெயர்கள்.
இதுவரை இலங்கை தமிழ், கேரளா தமிழ் என்ற உச்சரிப்பை
கேட்டவர்கள், சீனர்களின் தமிழ் மொழியையும் கேட்டு மகிழலாம். உடனே
செல்போனை எடுத்து, http://tamil.cri.cn என்ற இணையத்தில் மூலமாகவும், android உள்ளவர்கள் app.cri.com.cn என்ற முகவரியில், அதற்கான app பதவிறக்கம் செய்து, சீனர்களின்
தமிழ் மொழியை கேட்டு ரசிக்கலாம்.
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||
.jpg)
No comments:
Post a Comment