Wednesday, August 13, 2014

காமன்வெல்லத்தில் இந்தியாவின் பங்கு

கிளாஸ்கோவில் 20 வது காமன்வெல்த் போட்டியில், 15 தங்கம், 30 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 5 இடத்தை பிடித்தது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே, சாதிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

கடந்த டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தாலும், ஊழல் பிரச்சனையில் சிக்கி தவித்ததால், வெற்றியை ரசிக்க முடியவில்லை. ஆனால், இந்த வெற்றியை ரசிக்க முடிகிறது. 

வில்வித்தை, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை நீக்கியதால், இந்தியாவிற்கு பதக்க வாய்ப்புகளை குறைந்து விட்டது.
எப்போதும் போல், மல்யுத்தம், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில், நமது வீரர்கள் பதக்கங்களை அள்ளினார். ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பிரிவுகளிலும் பதக்கங்களை பெற்றும், சாதனை புரிந்துள்ளனர்.

தடகளம், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பேட்மிட்டண் போன்ற பிரிவுகளில், பத்தகங்கள் வென்றதன் மூலம், அந்த பிரிவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு, புது உத்வேகம் கிடைக்கும்.  

தமிழகத்தை சேர்ந்த சதிஷ் சிவலிங்கம், 77 கிலோ எடை பிரிவில், தங்க பதக்கத்தை பெற்றுள்ளார். தீபிகா பலிக்கல் ஜோஷ்னா ஜோடி, முதன் முறையாக ஸ்குவாஷ் பிரிவில் தங்கபத்தம் பெற்றனர். சரத் கமல்-அந்தோணி ஜோடி வெள்ளி பதகத்தை கைப்பற்றினர்.

காமன்வெல்த் போட்டிகள், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இல்லாத போதிலும், ஊடகங்கள் முக்கியம் அளித்தது ஆச்சரியம் அளித்தாக இருந்தது.(கிரிக்கெட் மேட்சு, ஏதுவும் இல்லை போலும் )

இந்தியா அளவில் விளையாட்டு துறையில், கடந்த பத்தாண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனைகள், அடுத்தடுத்த உலக அளவிலான போட்டிகளில், தொடர வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற துறை விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் கிடைப்பது இல்லை என்பது வருத்தமான விஷயம், பெரும்பாலான வீர்ர்கள், தன்னுடைய சொந்த செலவிலே, தன்னை தயார் படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசும் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், அதிலுள்ள அரசியல் தலையீட்டால், வீரர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதில்லை..

வட்டு எறிதல் போட்டி நடக்கும் போது மழை பெய்தது. ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட விகாஸ் கவுடா இரண்டு ஷு வைத்து மாற்றி மாற்றி  வட்டு ஏறிந்தார். ஆனால், பெண்கள் பிரிவில் பற்கேற்ற சீமா பூனியாவிடம் ஒரு செட்டு ஷு மட்டுமே வைத்து இருந்தார். இருந்தாலும் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படாதபாடு பட்டு எனக்கு கிடைத்த 34 ஆயிரம் ரூபாயில், பத்தாயிரம் ரூபாய்க்கும் மட்டும் ஷூ வாங்கி விட்டேன். இந்த காமன்வெல்த் போட்டிக்காக, சுமார் 4 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறேன்…” என்றார் வருத்ததுடன். இந்நிலை இனிமேலாவது மாறுமா? காத்திருப்போம். 

||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment