Sunday, August 24, 2014

வேலையில்லா பட்டதாரி-- திரை விமர்சனம்….

என்னுடைய முதல் முயற்சிவேலையில்லா பட்டதாரி படத்தின் திரை விமர்சனம்…. சிறிய நட்பாசை….

இஞ்சினியர்ங் படித்து விட்டு வேலை தேடி அலையும் ஒரு பட்டதாரி இளைஞன் தனுஷ். அதுவும் கட்டுமான துறையில் மட்டுமே சாதிக்க துடிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன். எப்போதும் போல் தன் மகனை திட்டும் குடும்ப தலைவனாக சமுத்திர கனி, காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் தாயாக சரண்யா நடித்து இருக்கிறார்கள். ஐடி வேலை பார்க்கும் தம்பி, தனுஷின் பழைய காலத்து மோட்டர் பைக், அவனது செல்ல நாயான ஹாரிபாட்டர் என ரம்மியாக கதை களம் தொடங்குகிறது.

எப்போதும் போல, பக்கத்து வீட்டிற்கு நாயகி அமலாபால் குடி வருகிறார். அவரை கண்ட உடன் காதல் என்று படம் நகருகிறது. கட்டுமான துறையின் வேலைக்காக காத்திருப்பதற்காக மட்டுமே, நாயகி வேலையில்லாத தனுஷின் மீது காதல் கொள்வது சற்று அபத்தமாக தெரிகிறது. ஆனால் தமிழ் சினிமாவிற்குஇதெல்லாம் புதிதல்ல.

நாயகிக்காக ஆப்பிள் போன் வாங்க, பிடிக்காத வேலைக்கு போய், அதில் உள்ள பணத்தை தம்பிக்கு கொடுத்து விட்டு நாயகனை நன்றாகவே தியாகியாக காட்டி இருக்கிறார் டைரக்டர்.

சில காரணங்களால் அம்மா சரண்யா இறந்து விட, வீட்டாரின் கோபம் தனுஷின் மீது திரும்புகிறது. பின்னர் சரண்யாவின் நுரையீரல் பொருத்தப்பட்ட பெண்ணின் தந்தை மூலம், கட்டுமான துறையில் வேலையில் சேருகிறார்.

அங்கு வீடற்றவர்களுக்கு, அரசு கட்டி கொடுக்கும் ஒரு வேலை, தனுஷின் தலைமைக்கு வருகிறது. அதற்கு, மற்றொரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது மீதிக்கதை. 

தனுஷிற்கு ஏற்றாற் பொல, அப்பா பேச்சை கேட்காத, வீட்டிற்கு உதவாத பிள்ளையாகவே கதையின் தொடக்கம் அமைந்து பின்னர், வீட்டிற்கு பிடித்த பிள்ளையாக மாறும் டிரெண்டை டைரக்டர் நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார்.

சரண்யாவின் தாய் வேடத்தை எப்போதும் போல சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இந்த படத்தில், சமுத்திர கனி தந்தையாக புதியதொரு பரிணாமத்தை தொட்டிருக்கிறார். இன்னும் பல படங்களிலும், தந்தையாக காணலாம். நாயகி படத்தின்  டுயட்டுக்காக, சில இடங்களில் வந்து போகிறார்.

பல படங்களிற்கு தலை காட்டி இருக்கும் வீவேக், தன்னுடைய பணியை சிறப்பாக செய்து இருக்கிறார். முதிர்ந்த நடிப்பின் மூலமாக நகைச்சுவையை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்பாதியில் நகைச்சுவை இல்லாதது சற்று பின்னடைவே.

வில்லன் வந்த பிற்கு, கதையில் கொஞ்சம் சுவரஸ்யம் கூடும் என்றால், அதுவும் நடக்க வில்லை. அவ்வப்போது கதையில் நானும் வில்லன் என காட்டி இருக்கிறார் டைரக்டர். வில்லனின் எதிர்ப்புகள் ரசிக்கும் படியாக இல்லை.

ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பி, தனுஷிற்கு மதிப்பு கொடுப்பதும் பேஸ்புக்கின் மூலம் வேலையில்லாதவர்கள் தனுஷிற்காக வருவது, வந்த புதுதில் பெரிய புரஜெட் கொடுப்பது போன்ற சில குறைகள் தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட ஒன்று.

இந்தியாவில், படித்த இஞ்சினியர் வேலை கிடைக்காததை ஒன் லைன் கதையை கொண்டு தனுஷை அதில் அமர்த்தி, கதை களம் அமைக்கப்பட்டதற்கு இயக்குனர் வேல்ராஜிற்கு பாராட்டுகள்.

பாடல்களும் கதையை விட்டு வெளியில் போகாததால், படம் பார்ப்பவர்களை படத்தை விட்டு வெளியே போக வாய்ப்பில்லை. பாடலாசிரியாக ஒரு படி தனுஷ் முன்னேறி இருக்கிறார் என்று சொல்லலாம்.

முதலில் வேலையில்லாத போது, சற்று தாடியுடனும் கைலியுடன் தென்படுகிறார். வேலை கிடைத்தவுடன் தாடி எடுத்தும், அதற்கு ஏற்றார் போல் மாறி இருப்பார். பின்னர் வில்லனை எதிர்க்கும் போது தாடி வைத்து கொண்டு (ரவுடி போல) என்று ஒப்பனை நன்று.

உருப்புட மாட்ட! உருப்புட மாட்ட!  என்று திட்டுவதிலும் தொடங்கி தனுஷை அடித்த பிறகு, சரண்யா- சமுத்திர கனியின் உரையாடல் என வசனங்கள் அனைத்தும் எதார்த்த நிலையை பிரதிபலிக்கதாகவும் சமூக நிலையை சொல்வதாக உள்ளது.

திரைக்கதை முற்பாதி சற்று மெதுவாகவும் ,பின்பாதி சற்று சுடாகிறது எனலாம். அம்மா பாசம், காதல் , சண்டை  மற்றும் காமடி என்று வழக்கமான மசாலா படமாக இருந்தாலும், தன்னுடைய கேரக்டருக்கு ஏத்த படத்தை நடித்து தயாரித்த தனுஷிற்கு ஒரு சல்யூட்……

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment