Wednesday, August 13, 2014

அனுபவமா?? அறிவியலா

கம்பளி பூச்சி மரத்தை விட்டு வெளியேறினால், மண்புழு மண்ணை விடுத்து வெளியே வந்தாலும், ஈசல் மண்ணை விட்டு மேலே வந்து பறந்தாலும் மழை வந்து வெள்ள பெருக்கு ஏற்படும் என பெரியோர் வழக்கு. விலங்குகள் இயற்கையை நன்கு அறிந்து வைத்து உள்ளன. அந்தமானில் சுனாமி வருவதை முன்னரே அறிந்த, சில பழங்குடி இன மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணித்த வரலாறு உள்ளது.

இதை போல், நேற்று ஈசல் மண்ணினை விட்டு மேலே பறந்ததை கவனித்தேன். இருந்தும், மதிய வேளையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், மழை வராது என்று எண்ணினேன்.

ஆனால், இரவு பொழுதில், மழைத்துளிகள் மண்ணை முத்தமிட்டது. ஆச்சரியம்!! ஆனால் உண்மை!!!

ரமணன் செயற்கை கோள் வரைப்படத்தை வைத்து, 24 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என்றாலும், மழை பொய்த்து விடுகிறது. ஆனால்விலங்குகள் இயற்கையை நன்கு அறிந்து வைத்துள்ளது.

||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment