Wednesday, August 13, 2014

வெகுஜன பார்வையில் காதல் பிரிவு

1----2----1
3----1----0
2----2----1
4----0----1
0----2----0
இது ஏதோ கணக்கு மாதிரி இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள். அப்படியென்றால், உங்கள் மனக்கணக்கு தவறு. இவை முறையே crush or infatuation, break-up மற்றும் love என்ற காதலின் பல்வேறு நிலைகளில் ஆட்கொள்ளப்பட்டவர்கள். இதை நான் சொல்லவில்லை. நேற்று நடந்த நீயா, நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதல் வயப்பட்டவர்களின் கூற்று. இந்த தகவல் உண்மையானதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. அது உண்மையா? என்பதை விட, break-up என்ற நிலைமை சமூகத்தில் சகஜமாக உள்ளது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை சமூகத்தின் முன் நிலைநிறுத்தும் போது, ஒரு பொதுவான கேள்வி எழுவது நியமானது. ”  break-up என்பது அவ்வளவு எளிதானா???? அப்போ, அவர்களிடம்  காதல் என்ற உணர்வே கிடையாதா????  என்ற கேள்வி காதலர்களின் மீது திணிக்கப்படுவது இயற்கை.

“. காதலை கைவிடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவர்களின் காதல் மீதே சந்தேக கண் படுகிறது. ”….சும்மா, பொழுதுபோக்குக்கு ஒன்னா சுத்திட்டா, பின்னாடி கல்யாணம்ன்னு வந்த உடனே கழற்றி கிட்டு போயிட்டா…..” என்ற வார்த்தைகள், சமூகத்திடமிருந்தும், ஏன் பல நேரங்களில், காதலர்களிடமிருந்து வெளிவரும்.

காதலை உணரும் போது, ”…மனசுல பட்டாம் பூச்சி பறக்குது, வானத்தில் பறக்கிற மாதிரி இருக்குது…” என்ற சினிமா வார்த்தைகளை தாண்டி, இனக்கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட, ஹார்மோன் மாற்றம் எனலாம். அப்போது மனதின் சொல்படியே, நாம் நடப்போம். ஆனால், நடைமுறை என்று வரும் போது, பகுத்தறிவு உள்ளே புக, காதல் சவப்பெட்டிக்குள் புதைக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிடுகிறது. 

பகுத்தறிவு காதலுக்கு முன்பே வெளிப்பட்டு, காதலை தடுத்த வரலாறும் உண்டு.  இந்த மொத்த உணர்வு பகிர்தலை, காரணங்களை அறியாமல் வெளியிலிருந்து பார்க்கையில், காதலே பொய்யென பார்க்கப்படுகிறது.

இப்படி காதலை பொய்யாக பார்க்கும் மனநிலையில் உள்ள பொதுஜன 
மக்களே, காதலை இன்னொரு வகையாக பார்க்கும் நிலையும் உள்ளது. 
அந்த சூழ்நிலை வேறு; தன்மை வேறு. எடுத்துக்காட்டாக, ஒருவன் காதலில் தோல்வியடைந்து தாடி வைத்து கொண்டு, மது வகைகளுக்கு ஆட்பட்டு, வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாமல் தவிக்கிறான் என்று வைத்து கொள்வோம்.

அவனை பார்த்து, “ … மச்சி!! நமக்கெல்லாம் ஆயிரம் பிகரும் மடியும் மச்சி..... இதுக்கு போய் பீல் பண்ணலாம எனக்கு ரெண்டு break-up… நான் ஏதாவது கவலைப்படறானாவா, ஒரு குவாட்டர் அடிக்கலாம்…” என்ற நண்பனின் வார்த்தைகளை எளிதாக கேட்க முடியும்.

“…… இவரு தான் பெரிய லவ் பண்ணிட்டாருஇவங்க காதல் பெரிய  ஷாஜகான் மும்தாஜ்  காதல்ன்னு மனசுல நினைப்பு…. இவ சுத்த வெவரம் கெட்டவன இருக்கானே…. நாங்க எல்லாம் அந்த காலத்திலேலவ் பெயிலர்…. நாங்க  ஏதாவது பீல் பண்ணினோமா…. போங்கபபா… .வேலையை பாருங்கப்பா….” என்பதை வெகுஜன மக்களிடம் எளிதாக வரக்கூடிய வார்த்தைகளாக இருக்கும்.

மேற்கண்ட இரண்டு நபர்களிடம் காதல் ஒன்று தான். ஆனால், அவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் வேறு என்று நான் நினைக்கிறேன்.  அவர்களை போல், நம்முடைய மனநிலையும் இடத்திற்கு தகுந்தாற் போல் மாறுகிறது.

இருவருமே, காதலை உணர்வு பூர்வமாக அணுபவர்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்போதே மூளையின் பேச்சை கேட்டிருந்தால், காதலே பண்ணியிருக்க மாட்டார்களே!!!. 

காதல், அடுத்த கட்ட நிலைக்கு செல்லுகையிலோ அல்லது திருமண நிலைக்கு செல்லுகையிலோ, தீடீரென்று காதலில் அறிவு பங்கு கொள்கிறது. பெற்றோர் ஒத்து கொள்ள மாட்டார்களோ?, இந்த குணநலன்கள் உள்ள பெண் நமக்கு ஒத்து வருமா?, வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டால், கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டி இருக்குமோ? போன்ற கேள்விகள் மூளை தூண்ட, காதல் தேவைதானா நிலைக்கு வந்து விடுகிறது.

காதல் தோல்வியில் மனம் முன்னிறுத்தப்படும் போது, இரண்டாதவது வகையினரும் மூளை முன்னிறுத்தப்படும் போது, முதலாவது வகையும் தோன்றுகின்றனர். இதில் யாரை குற்றம் சொல்வது புரியவில்லை??? மனத்தையா??? மூளையையா???

காதல் தோல்வியில், காதலையும் காதலர்களையும் விமர்சனம் செய்ய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அவரவர் தனிப்பட்ட அந்தரங்களை நாம் விமர்சிப்பது நாகரிகமில்லை. காரணங்களும் சூழலும் இடத்திற்கு இடம் மாறுவதை நாம் என்ன தான் செய்ய முடியும்???

இதை தாண்டி, நீயா நானாவில் ஒரு காதலின் தாய் சொன்ன விஷயம், கொஞ்சம் யொசிக்க வேண்டியது. நாங்களும் லவ் மேரேஜ் தான்நாங்க படற கஷ்டத்த பாத்திட்டு…… இவன் மறுபடியும் அந்த தப்ப பண்ணமாட்டன்னு நினைச்சேன்…. பட்என்ன பண்றது அவனு  அதே தப்பு பண்ணிடான்…” என்றார் வருத்தமாக. இது தான் அந்த எதார்த்தமோ!!!!

(காதலித்து திருமணம் கொண்டவர்களுக்கும், காதல் பொழுது போக்கு என எடுத்து கொள்பவர்களுக்கும் இப்பதிவு பொருந்தாது)

||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment