வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்கையில், குரூரம், வீரம், பகைமை, கோபம், தோழமை, காதல் மற்றும்
பயம் போன்ற மனிதனின் உணர்வுகளை உணராமல் வெளி வர இயலாது. இந்தியா
பன்னெடுங் காலமாக மன்னராட்சி முதன்மை பெற்று விளங்கியது. அதில் ஒவ்வொரு
மன்னரும், ஒவ்வொரு காரணத்தினால் வீழ்ந்தும் எழுந்தும் வந்து உள்ளனர். அதற்கு
பல அரசியல் காரணங்கள் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.
இந்தியாவின் மீது, பல வெளிநாட்டு
அரசர்கள் படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். அதற்கு
காரணம், இந்தியாவில் உள்ள செல்வ செழிப்பு தான் காரணம். அது
18- 19 நூற்றாண்டுகள் வரை தொடர்ந்தது என்றால் மிகையாது. கஜினி முகமது
இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து தோற்று போனார் என்ற பாட புத்தகங்களில் படித்திருப்போம். அது உண்மையல்ல.
17 முறையும், இந்தியாவில் இருந்து பல லட்சம் பொருமானம் உள்ள தங்கங்களையும்
வெள்ளிகளையும் அள்ளி சென்றார் என்பதே உண்மை. வரலாற்று
பிழையான செய்தி தான், நம்முன் காண்பிக்கப்பட்டது.
பாரசீக நாட்டை சேர்ந்த சைரஸ் மன்னர், முதன் முதலில் (கிமு ஐந்தாம்
நூற்றாண்டு) இந்தியாவின் மீது படையெடுத்தார். இவ்வாறு, பல அரசர்கள்
இந்தியாவின் மீது படையெடுத்து வந்தும், கிபி பத்தாம் நூற்றாண்டின்
இறுதி வரை ஆதிக்கத்தை செலுத்தவே முடியவில்லை. இந்திய
அரசர்களின் வலிமையான போர் திறனே முக்கிய காரணம். ஆனால், 8-9
நூற்றாண்டுகளில் வலிமையான அரசர்கள் இல்லாமல் வெற்றிடமாக காட்சியளித்தது. இதுவே முகமது
கஜினி படையெடுப்பிற்கு எளிதாக இருந்தது.
1191 ல் படையெடுத்து வந்த முகமது கோரிக்கும் எளிதாக இருந்தது. ஆனாலும், டெல்லியை
ஆண்ட இராஜபுத்திர அரசன் பிரதிவிராஜ் சவுகான், கோரியை எளிதாக வீழ்த்தினான். ஆனால், மறுபடியும்
பெரும்படையுடன் வந்த கோரி, 1192 ல் சவுகானை எளிதாக வென்றார். இந்த சவுகானின்
தோல்விக்கு, இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாததே முக்கிய காரணம் என்கின்றனர்
வரலாற்று ஆய்வாளர்கள்.
முகமது கோரி- சவுகானுக்கு இடையே
நடந்த போர் தான், இந்தியா வரலாற்று பக்கங்களின் முக்கியமானது. ஏனெனில், இந்த தோல்விக்கு
பின்னர், வெளிநாட்டு அரசர்களால் இந்தியா ஆளப்பட்டது. கோரியின்
படை தளபதியான என்ற குப்தீன் ஐபக் அடிமையால், டெல்லி
சுல்தானியம் தோற்றுவிக்கப்பட்டது. குப்தீன் ஐபக்கே, இந்தியாவை
ஆண்ட முதல் வெளி நாட்டு மன்னன். இதன் பிறகு, துக்ளக், கில்ஜி, சையது மற்றும்
லோடி என்று வரிசையான மூஸ்ஸிம் அரசர்களால் இந்தியா ஆளப்பட்டது.
டெல்லி சுல்தானியத்தை தொடர்ந்து, பாபனால்
தொடங்கப்பட்ட மொகலாய பேரரசு, இந்தியாவை ஆட்சி செய்தது. அதன் பிறகு
,1600 களில் வந்த ஐரோப்பியர்களின் கையில் சிக்குண்டு, 1947 ஆண்டு சுதந்திரம்
பெறும் வரை வெளிநாட்டவர்கள் கையிலே, ஆட்சி பீடம் இருந்தது. சுமார்
ஒன்பது நூற்றாண்டுகள், வெளிநாட்டவர் தலைமையின் கீழ் வாழ்ந்த மக்களின் அடிமை தனம்
இன்னும் மாறவில்லை என்பது வரலாற்றின் எச்சம்.
1192 ஆம் ஆண்டில் நடந்த போரில், சவுகான்
தோல்வியடைந்தற்கு முக்கிய காரணம், உதவியளிக்க மறுத்த மற்றொரு ராஜபுத்திர அரசனான ஜெயசந்திரனே
காரணம் என்கிறது வரலாறு. அதிலும் ஜெயசந்திரன், சவுகானின்
மாமனார் என்பதே உச்ச கட்ட அரசியல் பிழற்வு. அதனை பற்றி
தெரிவதற்கு வரலாற்றை பின்னோக்கி பயணிக்க வேண்டி உள்ளது.
ஜெயசந்திரனின் மகளான சம்யூத்தையை, பிரிதிவிராஜ்
சவுகான் காதலித்து வந்தார். அது பிடிக்காத ஜெயசந்திரன், சவுகானை
அழைக்காமல், சம்யூத்தைக்கு சுயவரம் ஏற்பாடு செய்தார். இதை அறிந்த
சவுகான், இரவோடு இரவாக, சம்யூத்தை கடத்தி
திருமணம் செய்து கொண்டார். இதனால், ஜெயசந்திரனுக்கும் சவுகானுக்கும், அரசியல்
பூசல் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியே, 1192 நடந்த போரில்
ஜெயசந்திரன் படை உதவி செய்ய மறுக்க, இறுதியில், சவுகான்
தோல்வியடைந்து கொல்லப்பட்டார்.
இந்த, மாமனார், மருமகன் சண்டையே, இந்திய
வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் வாதம். ஒவ்வொரு
கால கட்டத்திலும், அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப, அரசியல்
பூசல் இருந்தே வருவதை தவிர்க்க இயலாது. ஆனால், வரலாற்று
போக்கை மாற்ற வேண்டிய அளவிற்கு, அரசியல் உட்புகுந்தது காலத்தின் கொடுமை.
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment