Sunday, August 24, 2014

நீயா நானாவில் டாக்டர்!!!!

நேற்று விஜய் டிவியின் நீயா நானாவிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் மருத்துவர்கள் vs பொதுமக்கள் என்ற நேரடி விவாத நிகழ்ச்சியினை, கொஞ்சம் பார்த்தேன்.

மருத்துவ துறையின் மீது எப்போதுமே வைக்கப்படுகின்ற குற்றசாட்டுகள் அவை. பணத்தை முன்னிறுத்தப்படுவதால் ,மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.

ஏன் தேவையில்லாத டெஸ்டுகளை ஏன் எடுக்கிறீர்கள்???
வேறு மருத்துவமனையில் எடுத்த டெஸ்டுகளை ஏன் ஒப்பு கொள்ள மறுத்து, மறுபடியும் உங்களது மருத்துவமனையில் எடுக்க சொல்கிறீர்கள்????
master heath check up என்று மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்???? generic medicine விடுத்து branded medicine னை ஏன் பயன்படுத்துகிறீர்கள்??
இவ்வாறாக பல கேள்விகள் மருத்துவ துறையின் மீது கேட்கப்பட்டது. பதில்கள் சொல்ல மருத்துவர்கள் ,சற்று சிரமப்பட்டார்கள் என்பது உண்மை.

இந்தியாவில் மருத்துவ துறை நன்கு முன்னேறி விட்டது என்று பெருமை பட்டு கொண்டு இருக்கிறோம். அதே போல், மருத்துவ சுற்றுலாவிலும் இந்தியாவின் பங்கு அதிகமானது. ஏனெனில் ,மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மருத்துவ செலவுகள் குறைவு. அது போல, மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அரவனைப்பும் அதிகம்.

அதே நேரத்தில், நடுத்தர மக்களின் வாழ்வாரத்தை பெரிதாக பாதிப்பதாக அமைந்து விடுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மனிதனும் குறைந்த பட்சம் 20 சதவீதம் மருத்துவ துறைக்காக செலவிட வேண்டி உள்ளது என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.

தனியார் கல்லூரியில், மருத்துவ படிப்பிற்கான தொகை பல இலட்சங்களை தொடும் போது, அவரிடம் எப்படி சேவையை எதிர்பார்க்க முடியும். அது போல், இந்தியா அளவில் மருத்துவர் விகிதம் குறைவாக இருப்பதை மறுக்க இயலாது .இந்த விகிதத்தை குறைக்க அரசு முயல வேண்டும்.

அதே நேரத்தில், மருத்துவர்கள் அனைவரும் தவறு செய்ய வில்லை என்று சொல்ல முடியாது. பல மருத்துவமனைகள், அரசியல் வாதிகளாலும், பண முதலைகளாலும் நடத்தப்படும் போது சேவை என்பது மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில், மருத்துவ சேவை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதை மற்ற மாநிலங்களிலும் தொடர வேண்டும்.

அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், தனியார் மருத்துவ மனைகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

பொது மக்களிடம் பயத்தை முன்னிறுத்தி, பணத்தை பிடுங்கும் மருத்துவர்களையும் மருத்துவ மனைகளையும் எக்காரணத்தை கொண்டு நியாய படுத்த இயலாது.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment