விளையாட்டு என்றாலும், எந்தவொரு
இளைஞனுக்கும், உடல் முறுக்கேறுவது வழக்கம். அதிலும் கபடி என்றால், தமிழனுக்கு
சற்று அதிகமாகவே தோள்கள் துடிக்கும் என்றால் மிகையாது. கபடியை உலக அளவில் எடுத்து
செல்வதற்கு, உலக கபடி லீக் என்ற அமைப்பை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா
போன்ற நாடுகள் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட்டின் ஐபிஎல் போன்றது.
உலக கபடி லீக் போட்டி, இன்று
லண்டனில் அக்ஷய் குமார் மற்றும் சோனாஜி சின்ஹாவால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில்
8 அணிகள் பங்கு கொள்கிறது. 94
போட்டிகள் கொண்ட தொடரில், 144 கபடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் இறுதி போட்டி
டிசம்பர் 14 மொகாலியில்
நடைபெறுகிறது. உலக கபடி லீக் போட்டியை sony six தொலைக்காட்சியில்
நேரடியாக காணலாம்.
இதே மாதிரி pro-kabadi என்ற போட்டியை mashal
sports நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது. இது கடந்த ஜீலை 26 முதல்
நடந்து வருகிறது. இதனை star sports 2 நேரடியாக காணலாம். இதிலும் 8
அணிகள் பங்கு கொள்கிறது. இதிலும் பல வெளி நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஊடகங்களின் பார்வையில், உலக
கபடி லீக் மற்றும் pro-kabadi போட்டி பெரிதாக எடுத்துகொள்ளப்
படவில்லை. கிரிக்கெட்டை போன்று 3 மணி நேரமோ அல்லது கால்பந்தை போன்று 1 ½
மணி நேரமோ தேவையில்லை. சுமார் 1 மணி நேரத்தில், மொத்த
ஆட்டமும் முடிந்து விடும். வாய்ப்பு இருந்தால் கண்டு களியுங்கள், தமிழனின்
வீர விளையாட்டை!!!!!
மேலும் தகவல்களுக்கு: http://www.worldkabaddileague.net//
http://prokabaddi.com/
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment