நேற்று காலை, என் வீட்டிற்கு
அருகில் உள்ள வீரன் கோவிலுக்கு சென்றேன். பூசாரியிடன் ஏற்கனவே
சொல்லி விட்டதால், அவரும் எனக்கு முன் வந்து அமர்ந்து இருந்தார். நானும் பூசைக்கு தேவையான, தேங்காய், வாழைப்பழம்
மற்றும் பிற பூசை சாமான்களையும் எடுத்து சென்றேன். மது வகை
மற்றும் சுருட்டும் எடுத்து சென்றேன்.
அங்கு சென்றவுடன், என் மூளை
மனதை விட அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அந்த கோயில்
சுற்றி என்ன உள்ளது ? குளம் உள்ளதா??? ஆலமரம் உள்ளதா? என்று கேள்வி
ஆரம்பித்த மூளை, மனத்தை நிம்மதியாக இருக்க விடவில்லை.
இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லையே???
ரொம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டது. தேங்காய்
ஏன் உடைக்கிறோம்??? பத்தி ஏன் கொலுத்தி வைக்கணும்???? தீபம் ஏன்
காட்டுகிறோம்???....... என்றெல்லாம் கேள்விகள் என்னுள்ளே ஏவுகணையாய்
சீறி பாய்ந்தது. நிம்மதியாக சாமி பூசிக்க இயலவில்லை.
கோவிலுக்கு நாம் ஏன் போகிறோம்???. மனக்குறை
இருந்தால் நீக்க வேண்டியும், புதிய செயல்களை செய்ய தொடங்கும் போது நல்லாசி பெறவும் செல்கிறோம். ஆனால், அங்கு போயே
குழப்பம் வந்து விட்டது. என்ன பண்ணுவது??
கேள்வி கேளுங்கள்??? ஏன்???
ஏதற்கு???? எப்படி???? என்று உங்களையே கெட்டு கொள்ளுங்கள். ”அது உன்னை
அறிவாளியாக்கும்…” என்று அறிவு ஜீவிகள் சொல்லி கொடுத்தது, நம்மை நிம்மதியாக
சாமியை வழிபட விடவில்லையே!!!! அறிவு பக்தியுனுள் நுழைந்தால், அதோ கதி
தான் போலும்!!!!
கொஞ்சம் படிச்சாலே பிரச்சனை தான்
No comments:
Post a Comment