”என்ன சார்…. இப்படி சல்லி
தானாமான கேள்வி கேட்கீறிங்க…..” என்பது என் மனதிற்கு கேட்கிறது. அது ரஜினி என்பது எனக்கு
தெரியும். ஆனால், “ அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?...”என்பது
தான் மிகப்பெரிய கேள்வி.
கடந்த மாதம், குமுதம் இதழ்
நடத்திய சர்வேயில், டாக்டர் விஜய் அவர்களே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று
அறிவித்தது ( உண்மையான முடிவுகள் எப்படி வந்ததோ). அதற்கு விஜயும் நன்றியும்
தெரிவித்தார். மதுரையில் விழா நடத்தி, விஜய்க்கு
சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அரசு
தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் வெளியான போது, இரண்டு
விதமான எதிர்ப்புகள் கிளம்பின. இன்று, ”… என்றென்றும்
ஒரே சூப்பர் ஸ்டார் தான். அதுவும் ரஜினி மட்டும் தான்…” என்பது
ரஜினி ரசிகர்களின் வாதம்.. மற்றொன்று,”… அஜித் தான்
ரஜினி மாதிரி உழைச்சு முன்னேறுனவரு…. அவருக்கு தான் …அந்த
பட்டம் கரெக்ட்டாக இருக்கும்…..” என்பது அஜித் ரசிகர்களின் வாதம்.
இந்த பூகம்பம் கிளம்பி கொண்டிருக்கையில், எறியும்
விளக்கில் எண்ணெயை உற்றுவது போல, விஜய் டிவியும் தன் பங்கிற்கு கிளப்பி விட்டது.
விஜய்க்கு favourite hero என்ற விருதினை வழங்கியது. இந்த
விருதும், மக்கள் சர்வே எடுத்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதிலும் ஊடகங்கள், சில சந்தேகங்களை எழுப்புகிறது.
இப்படியாக பயணித்த, அஜித்-
விஜய் ரசிகர்களின் குடுமி பிடி சண்டைக்கு, சன்
டிவியும் தீனி போட்டது. சன் டிவியும் தன்னுடைய டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்த, விஜ்ய்
அவார்ட்ஸ் வழங்கப்பட்ட தினத்தில், அஜித்தின் வீரம் படம் திரையிடயிட்டது.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ஜூலை 27ம் தேதி
ட்விட்டர் தளத்தில் யார் கெத்து என்ற போட்டி நிலவியது. அன்று காலை முதலே ட்விட்டர்
தளத்தில் #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஷ்டேக்
அஜித் ரசிகர்கள் உருவாக்கினர். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உடனே #VIJAYFavHeroForever
என்ற ஹாஷ்டேக் உருவாகி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள். இதை பார்த்த வட
இந்தியர்கள், யார் அவர்கள் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
டி.ஆர்.பி முடிவுகளின் படி, சென்னை
வாசிகள், அஜித்தின் வீரம் படத்தையும், தமிழ்நாடு
முழுவதும் விஜய் அவார்ட்ஸை அதிக அளவில் பார்த்த தாக, ஆய்வு
நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதேபோல கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மீண்டும்
அஜீத், விஜய் ரசிகர்கள் புதிய ஹேஸ்டேக்குடன் களமிறங்கினர்.
விஜய் ரசிகர்கள் #VIJAY_DarlingofMasses என்
ஹேஸ்டேக்கையும், அஜீத் ரசிகர்கள் #22YearsOfSelfMadePhenomAJITH
என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கினர்.
இதே மாதிரியான, இரண்டு பெரிய
ஹீரோக்களுக்கு இடைய உண்டாகும்
தொழில் சார்ந்த போட்டி, ஒவ்வொரு
கால கட்டத்திற்கு தகுந்தாற் போல் இருந்து வருகிறது. ரஜினி- கமல், விஜய்-
அஜித், தனுஸ்- சிம்பு என்ற அந்தந்த தலைமுறைக்கு ஏற்ப நடப்பதை
மறுக்க இயலாது. இந்த போட்டி, சமூக ஊடகங்களினால் அதிகமாக பிரதிபலிக்கப்படுகிறது.
இந்த போட்டி, அவ்வப்போது
நடந்தாலும், இந்த அளவிற்கு அதிகப்படுத்த நிலையில் இருந்ததாக
தெரியவில்லை. இப்போது கொழுந்து விட்டு ஏறிவதற்கு முதற்காரணம், ”அடுத்த
சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி தான் …” என்று நினைக்கிறேன். ரசிகர்களின் போட்டியை, குமுதம், விஜய்
டிவி மற்றும் சன் டிவி தன்னுடைய சுய இலாபத்திற்காக பயன்படுத்தி விட்டன என்று எண்ண
தோன்றுகிறது.
இவ்வாறு, ரசிகர்களுக்கு
இடையே போட்டி நடந்தாலும், நடிகர்கள் அதனை பெரிதாக எடுத்து கொண்டதாக தெரியவில்லை.
அதிலிருந்து, அவர்களுக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார்களோ
, என்னவோ?? உண்மையான தலைவன், தன்னுடைய
தொண்டன் சண்டை போடுவதை விரும்ப மாட்டான். இதே வேலையை, சமூக
ஊடகங்களில், சிலர் செய்து வருகின்றனர். தரம் தாழ்ந்த வார்த்தைகள் கூட, ரசிகர்கள்
அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
சரி விடுங்கள்….சூப்பர் ஸ்டார்
பட்டத்தை, அஜித் அல்லது விஜய் இரண்டு பேரில் ஒருவருக்கு வழங்கி
விடுகிறோம் என்று வைத்து கொள்வொம். அதனால் மட்டும், என்ன
பலன் வந்து விட போகிறது. இதுவரைக்கு
வைத்திருந்த ரஜினியும், இனி சூட்டி கொள்ளும் நினைக்கும் விஜய் அல்லது அஜித்தும், சூப்பர்
ஸ்டார் பட்டத்தினால், ரசிகனுக்கும் சமூகத்திற்கும் எந்தவொரு பிரதிபலனும்
இருப்பதாக தெரியவில்லை.
ஒவ்வொரு நடிகனும், அந்தந்த
அரசியல் கால சூழ்நிலைக்கு ஏற்ப, கேமரா முன்னே நடிப்பதை போல, மக்களின்
முன் நடித்து விட்டு செல்கின்றனர்.
ரசிகனும், அவையெல்லாம்
உண்மையென நம்பி, தன் தலைவனுக்காக, பால்
அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறான். ரசிகனாக இருப்பதினால் தவறில்லை. ஆனால், வெறியராக
தான் இருக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.
இதை பார்க்கும் போது. ஒரு முக நூல்
வரிதான் நினைவுக்கு வருகிறது.
“ ஊழைப்பவனுக்கு உணவே கிடைக்காத போது
நடிப்பவனுக்கு
நாடே கிடைக்கிறது….”
(நான்
சினிமாவிற்கு ஏதிரானவன் அல்லன். நானும் சினிமாவை ரசிப்பவன். ஒவ்வொரு நடிகரின், ஒவ்வொரு
திறமையும் ரசிப்பவன். இந்தியாவில்சினிமா பலகொடி குடும்பங்களுக்கு, வருமானம்
தரக்கூடிய முக்கியமான தொழில் என்பது உண்மை. இந்தியாவின் GDP யில்
முக்கிய பங்கு வகிப்பது சினிமாத்துறையும் கேளிக்கை துறையும் என்பதில் சிறிதும்
ஐயமில்லை. ஆனால் சினிமாவை கலையாக பாருங்கள், வாழ்க்கையாக
பார்க்காதீர்கள்)
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment