நேற்று விஜய் டிவியில் நீயா நானா விவாத நிகழ்ச்சி பார்த்தேன். குழந்தை
பிறப்பை தள்ளி போடுவது பற்றி விவாதம் நடந்தது. இந்த வகையான
தலைப்பு, விவாதத்திற்கு உரியதா என்ற வினாவே என்னுள் எழுந்தது. ஆனால், இதுவும்
முக்கிய விவாத பொருள் தான் என்பது நிகழ்ச்சியின் முடிவில் அறிந்து கொண்டேன்.
மக்கள் தொகை அதிகமாகி கொண்டு இருக்கும் வேளையில், குழந்தை
பிறப்பை குறைப்பது பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி
பட்ட சமூகத்தில், குழந்தையின்மை என்பது சமுதாய அமைப்பில், மிகப்பெரிய
அவமான சொல்லாக, பண் நெடுங்கலமாக இருந்து வருவது வருத்தமான ஒன்றாகும். குழந்தையின்மைக்காக
மருத்துவரிடம் வரும் பெற்றோரின் வேதனைகள் சொல்லி புரிய கூடியவையல்ல.அதே சமயத்தில், குழந்தை பேறு இல்லாததால், வாழ்க்கையே
முடிந்து விட்டதாக கருதும் பெற்றோரையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
குழந்தை பேறு என்பதை ஆணாதிக்கமாக, பெண் சமூகம் பார்ப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏனெனில், தாய்மை
என்பதை பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக, நான் பார்க்கிறேன். தாய்மையினால் ,பெண்களுக்கு
கிடைக்கும் ஆனந்தம் எல்லையில்லாதது.
குழந்தை பேறினை தள்ளி போடுபவர்களின் வாதங்கள் உண்மையாகவே
இருந்தாலும், கணக்கு போட்டு வாழ்க்கை நடத்துவதை போல காட்சியளிக்கிறது. அதில் அன்பையும்
பண்பையும் ஏதிர்பார்க்க முடியாது என நினைக்கிறேன். பொருளாதார
நிலையை முன்னிறுத்தி குழந்தை பேற்றினை தள்ளி போடுவதும், சரியான
காரணமாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரும் பெற்றோரும் நினைத்தால், நாமெல்லாம்
பிறத்திருக்க வாய்ப்பில்லை.
திருமண வயது அதிகமாகி விட்ட நிலையில், குழந்தை
பேற்றில் உள்ள அறிவியலின் பாதிப்பை மறந்து விட முடியாது. ஆண்களின்
விந்துகளின் எண்ணிக்கை குறைபாடு, நீந்துதலில் உள்ள குறைபாடு, பெண்களுக்கு
நீர்கட்டிகள் போன்றவை தவிர்க்க முடியாத தடைகளாக மாறி உள்ளதை ஏற்று கொள்ள வேண்டும்.
குழந்தை பேற்றினை ஏதிர் நோக்கி இருக்கும் இருவரின் வார்த்தைகள்
ஏதர்த்தானமானவை; வலியானவை. அவர்களுக்கு, குழந்தையின்மை
என்ற நிலை, குழந்தை
பிறப்பை தள்ளி போட்டதால் மட்டுமே, வந்து விட்டது என்று
சொல்ல முடியாது. ஆனாலும், குழந்தை பிறப்பை
தள்ளி போடுபவர்கள், கருக்கலைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டால், பின்னர்
குழந்தை பேற்றில் பிரச்சனைகளை சந்திக்க கூடும்.
குழந்தையை தத்தும் எடுத்தும் கொள்ளும் நிலைமைக்கு , இன்னும் சமூகம் முன்னேறவில்லை என்றே நினைக்கிறேன். அனாதை இல்லங்களில்
உள்ள குழந்தைகளை தத்து எடுத்து கொள்ளுவது, குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.
மேலை நாடுகளில், குழந்தை
பேறினை அதிகப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசுகள், பல சலுகைகளை
வழங்கி வந்தாலும், அம்மக்கள் குழந்தையின்மையை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆனால், இந்திய
மக்கள் குழந்தை பேறினை இறைவனின் வரமாகவும், குழந்தையே
வாழக்கையின் பிரதிபலமாக பார்க்கும் நிலையில் உள்ளதால், பெரிய சமுதாய
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
பெண்கள் முடிந்த அளவிற்கு, 27-30 வயதிற்குள்
குழந்தை பேற்றினை அடைய முற்படுங்கள். அதற்கு பிறகும்
தள்ள போடாதீர்கள்.
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
.jpg)
No comments:
Post a Comment