Sunday, August 24, 2014

தோல்விலிருந்து கற்று கொள்வது என்ன??

இந்திய கிரிக்கெட் அணிக்கு, ரொம்பவும் சோதனை காலமாக அமைந்து விட்டது. அதிலும், குறிப்பாக, தோனியின் கேப்டன் ஸ்ஷிப் சரியில்லை என்றும், ப்ளாச்சரின் பயிற்சியும் சரியில்லை என்று முன்னணி வீர்ரகள் பலரே வெளிப்படையாக தீட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்டை விட, மோசமான தோல்வியாக கிரிக்கெட் ஆய்வாளர்களிடமிருந்து பார்க்க முடிகிறது. ஏனெனில் கடைசி இரண்டு டெஸ்டில், இன்னின்ஸ் தோல்வி என மோசமான தோல்வி, இந்திய அணி சந்தித்தது. அதுவும் மூன்று நாட்களிலே மேட்சு முடிந்து விட்டது. இந்திய வீரர்களிடம் போராட்ட குணம் இல்லை என்கின்றனர் பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள்.

சுமார் 4 ஆண்டுகளாக, வெளிநாட்டு பிட்சுகளில், இந்தியா அணி எந்தவொரு தொடரையும் வெல்லவில்லை என்பது வருத்தமான விஷயம். நீங்கள் வெளி நாடு செல்லுகையில், இந்திய ஆடுகளங்களையும் எடுத்து செல்லுங்கள்…” என்று கிரிக்கெட் ரசிகர்களே, வீரர்களை எள்ளி நகையாடுகின்றனர்.

ஒபனிங் சரியாக அமையவில்லை, மிடில் ஆர்டர் சரியாக இல்லை, சார்ட் பிச் பாலை இந்திய வீரர்களுக்கு சரியாக ஆட தெரியாது, ஸ்லீப் திசையில் கேட்சு பிடிக்க தவறாமை போன்றவை காரணங்களாக, பல முன்ணணி வீரர்களால் காரணங்களாக முன் வைக்கப்படுகிறது. வீரர்கள் தேர்வில் குழப்பமும் உண்டு என்கிறார்கள் சிலர்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகள் தான் உண்மையான முகமாக இருப்பதாக கிரிக்கெட் வீரர்களே ஓப்பு கொள்கிறார்கள். அப்படி இருக்கையில், இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் விளையாட்டில் ஆர்வம் இல்லையா என்று வினாவும் முன் வைக்கப்படுகிறது. ஐபிஎல் மேட்சுகளில் பணம் உள்ளே புகுந்ததால், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் குறைந்து இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தின், இந்திய வீரர்களின் மீதான மதிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், லார்ட்ஸ் மைதானத்தின் வெற்றியை, நாம் மறக்க இயலாது. அஸ்வின் ஆல் ரவுண்டராக முதல் இடத்தில் இருப்பதையும், புவனேஸ் குமார் தொடர் நாயகன் விருதினை பெற்றதை மறுப்பதற்கும் இயலாது.

நாமும் பல காலங்களுக்கும், வெளிநாடு பிட்சுகளில் விளையாடுவது கஷ்டம்என்று சப்பு கட்டு கட்டி கொண்டு இருக்க முடியாது. இந்தியாவில் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லா பிட்சுகளிலும் விளையாடும் அளவிற்கு நாம் முன்னேற வேண்டும்.ஆடாத தெரியாதவன் தெரு கோணால் …  ” என்ற பழமொழியாக மாறி விட கூடாது.

அதே நேரத்தில், இடி விழிந்து விட்டது போல், கன்னத்தில் கை வைத்து உட்கார வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு, பெரிய விஷயமில்லை என்பது நிதர்சனம். ஊடகங்களில் ஒரு பக்க விமர்சன கட்டுரை எழுதும் அளவிற்கு தோல்வியும் இல்லை. இதை விடுத்து, இந்தியனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருப்பதை மறந்து விட கூடாது.

காத்திருந்து பாருங்கள்…..” என்ற கேட்பனின் வார்த்தையை நம்புவோமாக……. அதே நேரத்தில், தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்ளவில்லை என்றால், இந்த தோல்வி வெறும் வருத்தமாக முடிந்து விடாது; வரலாறாக மாறாது.

அடுத்த உலக கோப்பை முன்னிறுத்தி ஆடி பழகி கொள்ள வேண்டும். இல்லை…. நான் போன உலக கோப்பையை வைத்து…. பல நூற்றாண்டு பேசுவேன் என்றால்…… இவர்களை பல பேர்கள் திட்டுவதில் தவறும் இல்லை என்றே நினைக்க தோணும்.  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment