Sunday, August 3, 2014

காதல் வலி- கவிதை

கடற்கரை மணலில்
கோதி கொண்டிருக்கிறது விரல்கள்
மனதினை போல்….

அலைகள் போல வந்தவள்…..
காதலின் ஆழத்தை
அன்பால் ஆர்பாரித்து
பரிசத்தால் பரிதவித்து
பூரிக்க வைத்தவள்…..
சுனாமியை போல்
அடித்து சென்றுவிட்டாய்
பற்று அற்ற நினைவுகளுடன்……

சுண்டல் விற்பவன் கூட
ஏளனமாய் சிரிக்கிறான்
உதட்டை பிதுக்கி
கன்னத்தில் அரைவது போல……
உன் நினைவும்
உந்தன் மனமும்
என்னமிடமிருந்து
பிரியவில்லை என்பதை
அவன் எப்படி அறிவான்?

அலையின் ஒசை கூட
அதிகமாக ஒலமிடுகிறது
எந்தன் சோக கீதத்தை கூட
சேர்ந்தே படுகிறது

செல்போன் ரீங்காரமிடும் போதெல்லாம்
உன் பெயர் வாராதா என
எம் மனம் கேள்வி கேட்கிறது

அவளின்
உதட்டரோர புன்னகையும்
இமை மறைக்கும் கண்ணையும்
காணாத என் கண்ணும்……
வசை மொழியும்
மென்மொழியும்
கேட்காத என் காதும்
மூளையிடம்
ஆர்பாட்டம் நடத்துகின்றன…..

உனக்கு பிடித்த
பானி பூரி கடை யெல்லாம்
என் கண்கள் தேடிகிறது
நீ வருவாய் என

நிகழ்கால நிஜங்களையும்
கடந்த கால நினைவுகள்
கண்ணீரால் மறைக்கிறது
உந்தன் முகத்தை தவிர…..

காதலிப்பதற்கே
காரணம் தெரியாத
என்னிடம்
காதல் பிரிவின்
காரணத்தை கூறாமல்
சென்றது ஏனோ??

நாவினால் சுட்ட வடு
குறள் மொழியின்
அர்த்தம் தெரியாத எனக்கு
காதல் சு(ப)ட்ட வலியின்
ரணம் அறிய
வைத்து விட்டாய்…..

நட்பின் நினைவுகளே
வாழ்க்கையில் சுமந்து
செல்லுகையில்……..
உந்தன் நினைவுகள்
என் வாழ்க்கையில் என்றென்றும்
நம் காதலாய்
என் மனதில்….
நீ சென்ற பிறகும்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  

No comments:

Post a Comment