நேற்றைய நீயா நானா பகுதியில், நல்லவனாக
வாழ்வது எப்படி? என்ற தலைப்பை பார்த்தேன். உண்மையிலே நல்லதொரு தலைப்பு
என்றால் மிகையாது. சமூகத்தில் ”எவன் நல்லவன்?” என்று நாம் சொல்லி கொண்டிருப்பதின் மூகத்திரையை
கிழித்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதங்கம் எதார்த்தமானது; ஆத்ம
மார்த்தமானது; உண்மையானது. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
ஆனால் நாம் யாரை நல்லவனாக நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதே பெரிய கேள்வியாகி
விட்டது.
மனம் சற்று சிக்கலானது. எவன் நல்லவன் என்று கேள்வி
கேட்டால் கூட, எதிர்மறை செயல்களை செய்யாதவன், நல்லவன்
என்று சொல்லி பழகி விட்டது. இத்தகைய நல்ல குணங்கள் இருப்பதால், நல்லவன்
என்று சொல்ல மறுக்கிறது. சமூகமும் அப்படி தான் பழக்கி வைத்திருக்கிறது. கருப்பு
கலர் இருப்பதால் வெள்ளை அழகாக தெரிகிறது. நொண்டி நடப்பவனை வைத்தே, நன்றாக
நடப்பவனை அடையாளம் காட்டுகிறோம். இது நம் குற்றமல்ல. மனித மனதின் குற்றம்.
நன்றாக படித்து, நல்ல
மதிப்பெண் பெற்று, நல்ல வேலைக்கு போய், வீட்டில்
நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணினை திருமணம் செய்து, எந்தவொரு
பிரச்சனைக்கு போகாமல், மது மற்றும் புகை வகைகளை உட்கொள்ளாமல் இருப்பவன் நல்லவன்
என இச்சமூகம் முத்திரை குத்தி உள்ளது. இதில் எந்தவொரு குணத்திலிருந்து தடம்
மாறினாலும், மனிதன் கெட்டவனாகி விடுகிறான். .
”நல்லவன் எப்படி இருக்க வேண்டும்…” என, திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை
போன்ற பதினென் கிழக்கு நூல்கள் மூலமாக பத்து நூற்றாண்டு முன்னரே, நம்
முன்னோர் கூறி விட்டனர். அந்த நூல்களின் படி நடந்தால், “ நீ
இந்த சமுதாயத்திற்கு லாயிக்கற்றவன், புழைக்க
தெரியாத புள்ளைய இருக்கியே, இவருக்கு பெரிய காந்தின்னு மனசுல நினைப்பு, சமுதாயத்தை
திருத்த வந்து இருக்காரு….” என்ற பல அவல ஒலிகள் தான் கேட்கும்.
ஒவ்வொரு மனிதனிடமும், நல்ல
குணங்களும் கெட்ட குணங்களும் கலந்தே இருக்கும். அதில் சதவீத வேறுபாடே, நல்லவனையும்
கெட்டவனையும் வேறுபடுத்தி காட்டும். எந்தவொரு கெட்டவனிடமும், எதாவது
ஒரு நல்ல குணம் இருக்கும் என்பது இயற்கை நியதி. அதை அவனிடமிருந்து நாம் தான் கண்டு
பிடிக்க வேண்டும். நல்லவனிடமிருந்து ”நாம்
எப்படியெல்லாம் வாழ வேண்டும்” என்றும், கெட்டவனிடமிருந்து
”எப்படியெல்லாம் வாழ கூடாது” என்று
கற்று கொள்ள வெண்டும்.
அன்பு, நட்பு, நேசம், பொதுநலன், சகிப்பு தன்மை, விட்டு
கொடுத்தல் , உதவி , தானம், வீரம் போன்ற குணநலன்கள் தமிழ் டிஷ்னரியில் மட்டும் தேட
கூடியாதாக மாறாமல் இருந்தால் சரி…….
ஆங்கில் கவிஞன் வார்த்தைகளே, நினைவில்
வந்து செல்கின்றன. உலக ஒரு நாடக மேடை…… நாம் அனைவரும்
நடிகர்களே…. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கதாப்பத்திரம்…..
ஒழுங்காக நடித்தால், மறு ஜென்மம்(பாத்திரம்) கிடையாது… இல்லையேல்
மீண்டும் பிறந்து வேறு பாத்திரமாய்(ஜென்மம்) நடிக்க வேண்டியிருக்கும்……இந்த
கற்பனை காவியத்தை …. இன்றைய மனிதர்கள்….. உண்மையாக்கி
விட்டார்கள் போலும்.
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment