+2ல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மகன்... டாக்டர் கனவு பொய்த்ததால்
தந்தை தற்கொலை- பத்திரிக்கை செய்தி…..
இது ஓரு விசித்திரமான செய்தி…….
வருட வருடம் முதல் மார்க் எடுத்த மாணக்கரை பற்றிய செய்தி
வருகையில், ஏதேனும் ஓரு மூலையில் மார்க் குறைந்ததால், மாணக்கர் தற்கொலை என்பதும் செய்தியாக
வெளிவருகிறது. எமன் பாச கயிற்றை +2 தேர்வு முடிவுக்காக தயாராக வைத்து இருப்பார் என்று
நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இதற்கு யார் காரணம்???? அதற்கு மாணக்கர் மட்டும் தான் காரணமா???
இல்லை…இல்லை ….என்பதை அடித்து கூறலாம். அப்போது யார் காரணம். சமுதாயம் என்று ஒற்றை
வார்த்தையில் விடை கூறி விடலாம்.
இதில் பல விஷயங்களை உற்று நோக்க வேண்டும். ஒரு மாணக்கர்
+2 அதிகம் மார்க் எடுத்து மருத்துவம் அல்லது பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே
வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கல்வி நிலையங்களும் பெற்றோரும் மறைமுகமாக திணித்து
வருகின்றன.
பெற்றோரும், தன் மகன் அல்லது மகள் என்ன படிக்க வேண்டுமென்று
விருப்படுகிறாள் என்று அறிவதில்லை. அவர்களுடைய படிக்கும் திறன் எவ்வளவு??? அவர்களால்
எவ்வளவு மார்க் வாங்க முடியும் ???? என்று யோசிக்காமல், நிறைய மார்க் வாங்க வேண்டுமென்று
கட்டாயப் படுத்துகிறார்.
+2 அதிக மார்க் எடுக்கா விட்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
என்ற மனநிலையை மாற்ற வேண்டும். மருத்துவம் அல்லது பொறியியல் துறையை தவிர்த்து நிறைய
துறைகளை சாதிக்க கூடியவைகளாக உள்ளன. மனப்பாடம் செய்து பரீட்சையில் வாந்தி எடுத்து விட்டு
மருத்துவம் அல்லது பொறியியல் சேர்ந்து விட்டால் சாதிக்க முடியுமென்று யார் சொன்னது????
படிப்பறிவை விட அனுபவ அறிவு முக்கியமென்பதை மறந்து விட வேண்டாம்.
படித்து பட்டம் பெற்று சாதித்தவர்களை விட படிக்காமல் சாதித்தவர்களே,
இந்த மண்ணுலகில் அதிகம் என்பதை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறதா????
மார்க் மனித வாழ்க்கையை மாற்றாது!!!!
மனித மனம் தான் வாழ்க்கையை மாற்ற கூடியது!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை போல் ஒருவன்
||||||||வேதை குமார்|||||||||||
No comments:
Post a Comment