Saturday, May 10, 2014

கடவுளின் குழந்தைகள்:

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கிகரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனித சமூகங்களால் வரவேற்க தக்க ஆணை.திருநங்கை வாழ்வில் ஓளி ஏற்றி வைத்த தீர்ப்பு என்று கூறலாம்.

சிறு வயதில் ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து வரும் வேளையில், ஹார்மோன் மாற்றத்தில், உடலில் ஓரு சொல்ல முடியாத மாற்றம் உண்டாகி, ஆணுமற்ற பெண்ணுமற்ற நிலைக்கு மானுடம் தள்ளப்படுகிறது.

திருநங்கையாக மாறிய பிறகு, வீட்டிலிருந்து புறம் தள்ளப்பட்டு, சமுதாயத்தின் அவல ஓலியாக மாறுகிறது. சமுதாயமும், வீட்டினரும் திருநங்கைகளை தீண்ட தாகதவர்களாகவும், குற்றம் புரிந்தவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். குற்றம் புரிந்தவன் கூட நிம்மதியாக வெளியில் நடமாடும் போது, ஹார்மோன் செய்த தவறால் திருநங்கையாவன், குற்றம் புரிந்தவன் போது பார்க்கப்படுகிறான்.

பல இடங்களிலும் பிச்சைக்காரர்களாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியும் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.
ஒன்பது’, ‘அலிபோன்ற கொச்சை சொற்கள் பயன்படுத்தும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுளின் குழந்தைகளாக திருஎன்ற அடையாளத்துடன் திருநங்கை என பெயரிட்டவர் கலைஞர்.

திருநங்கைகளுக்கு தனியாக வாரியத்தையும் குடும்ப அட்டையும் வேலை வாய்ப்பு வழங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. திருநங்கைகள் உடலளவிலும் மனதளவிலும் நன்கு தைரியமானவர்கள், அனைத்து வேலைகளையும் செய்யும் சக்தியுடையவர்கள். ஆனால், சமுதாயம் பலகீனமானவர்களாகவே காட்டுகிறது.

கடவுளின் குழந்தைகளை, கடவுளாக மதிக்க வேண்டாம், குறைந்த பட்சம் மனிதாக மதிக்க கற்று கொள்வோம்…….

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்

No comments:

Post a Comment