Friday, November 3, 2017

வடகிழக்கு பருவ மழையும், ஊடக மனநிலையும்


தொ(ல்)லைக்காட்சியை திறந்தால், ” தமிழ்நாட்டில் சென்னையை தவிர, மற்றைய இடங்களில் மழை பெய்யவில்லைஎன்று தான் எண்ண தோன்றுகிறது. சென்னையை தாண்டியும், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் மக்கள், எந்தளவிற்கு வடகிழக்கு பருவ மழையினால் இன்னல் அடைகிறார்களோ, அதே அளவு துயரங்கள், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது.

சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிறப்பகுதிகளை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் மனநிலை என்பது, ஊடகத்திற்கு புதிதல்ல!!! 2015 ஆம் ஆண்டு, சென்னை வெள்ளத்தினை போல் பாதிப்படைந்த கடலூரை கண்டு கொள்ளவில்லை!!! இதில் தேசிய ஊடகம் சென்னை வெள்ளத்தை கண்டு கொள்ளவில்லை என்ற கூச்சல் வேற!!!

எங்களை போல் கடலோர மாவட்டங்களுக்கு மழை ஒன்று புதிதல்ல!!! ஆனால் திடீரென பெய்யும் மழையால், எங்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்பது உண்மை!!!

பருவ மழை தொடங்குமே என்று சந்தேகத்தில் நெல் விதைப்பு செய்யாத இடங்கள்!!! பெருமழையால், நெற்பயிர் முழ்கி கிடக்கும் வயல்கள்!!! கூரை வேய்ந்த வீடுகளில் மழைக்கு ஒழுகும் தண்ணீர்!!! அன்றாடம் கூலிகள், மழையினால் வேலையில்லாத நிலை!!! அடுத்த வேளை ஆடு மாடுகளுக்கு இரையில்லாத நிலை!!!! மழையினால் சுவர் இடிந்த வீடுகள்!!! மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகள்!!! இன்னும் எத்தனையே துன்பங்கள்!!! துயரங்கள்!!!

தமிழ் நாட்டிலுள்ள அனைவரும், பருவ மழை அதிகமாகும் போது, சில இன்னல்கள் வருவது இயற்கை!!! ஆனால், சென்னை மக்கள் மட்டுமே, துன்பங்களுக்கு ஆளாகிறர்கள் என்ற பிம்பம் மட்டுமே தவறு என்கிறேன்.

நானும் சென்னை புறநகரில் பத்து வருடங்கள் வசித்திருக்கிறேன். ஒரு மழை தருணத்தில், தாம்பரத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல, 4-5 மணி நேர ஆனது. அதில் கிண்டி கத்திபரா மேம்பாலத்தை தாண்டுவதற்கு மட்டுமே 2 மணி நேரம்!!!

மற்றொரு மழை தருணத்தில், எங்கள் தெருவில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்க, மின்சாரம் அணைக்கப்பட்டது. ஆதலால், மற்றொரு நண்பர் அறையில் தங்கி இருந்த அனுபவம் உண்டு!!! சென்னை மழை எனக்கு பழகிய ஒன்று தான்!!!

சென்னை வாசிகள் மட்டுமே கஷ்டப்படுகிறார்கள்என்ற ஊடக தர்மத்தை தான் கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். மற்ற படிசென்னை மக்கள் படும் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று ஆரம்பித்தால்………….. ஒன்றும் சொல்வதற்கு இல்லை!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment