Wednesday, November 8, 2017

எமோஷனல் இண்டலிஜெண்டு


நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு புத்தகத்தை வாங்கிய அன்றே, படித்து முடித்து விட்டேன். சுமார் 100 பக்கங்களை உடைய சிறிய புத்தகமாக இருந்தாலும், கருத்து செறிவும், எழுத்தாளுமையும் சிறந்த புத்தகம் என்றால் மிகையாது!!!

இப்புத்தகத்தில் தலைப்பே, உலக சமூகத்திற்கு புதிது தான்!!! 1990 களுக்கு பிறகே, இச்சொல் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழில் கூட, அதற்கு ஒத்த சொல் கூட கிடையாது!!!

உலகத்தில் சிறந்த அறிவாளிகள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், உலகம் போற்றும் மாமனிதர்களாக இருப்பவர்கள் நூறில் அடங்கி விடும்!!! அதற்கு காரணம் என்ன???

பீடிகை அதிக இருக்கிறதோ!?!?!? அதன் விடையே, Emotional Intelligence!!!! உணர்வுகளை கையாள்வதில் திறமைசாலி என்று பொருள்!!!

மனிதர்கள் அனைவரும், எதேனும் ஒரு வகையில் உணர்ச்சி பிழம்பானவர்களே!! அதனை எப்படி கட்டுபடுத்தி, உலகத்தோடு ஒட்டி பயணிக்கிறார்கள் என்பதே Emotional Intelligence எனலாம்!!!!

உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டாமல், இடம் பொருள், ஆள் தெரிந்து கவனமாக, தேவைப்பட்டால் மட்டும் வெளிப்படுத்துவர்களை, எமோஷனலி இண்டலிஜெண்ட் என்றழைக்கலாம்.

தலைமை கீரிடத்தை அலங்கரிப்பவர்களுக்கு, எமோஷனல் இண்டலிஜென்ஸ் என்பது மிக அவசியமான ஒன்று!!! அதற்காகவே மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC), இது பாடப் பகுதியாகவே சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்களும் படித்து பாருங்கள்!!! சோம வள்ளியப்பனின் எழுத்தாளுமையில் சிறந்த தொரு புத்தகம்!!! உங்களையும் சிறந்த ஆளுமையாக மாற்றம் செய்யுங்கள்!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment