Monday, November 13, 2017

extrovert மற்றும் introvert மனிதர்கள்


உலகம் சற்று விசித்திரமானது. பலநேரங்களில், சிலரை அளவுக்கு அதிகமாக தூக்கி பிடிக்கும். அதாவது, அவருடைய திறமையை விட அதீத வெளிகொணரும். அதற்கு நேர் எதிர் மாறாக, சிலரை குழியில் தள்ளி விடும். அதாவது, அவருடைய திறமையை உதாசினப்படுத்தும்!!!!

மேற்கண்ட இருவரும், ஒருவகையில் வெற்றியாளர்களே!!! இருவரும் வெவ்வேறான திறமையை உடையவராக இருப்பார்!!!! ஒருவரின் திறமையை மட்டும் அதிகமாக உலகம் எடுத்து கொள்ளும்!!! மற்றொருவரை எளிதாக அமுக்கி விடும்!!!!

இதை புரிந்து கொள்வது சற்று கடினமானதே!!!! நவீன உலகம், இவர்களை extroverts and introverts என்று அழைக்கிறது. இவர்களை சித்த மருத்துவத்தின் உடல்வாகு அடிப்படையில் எடுத்து கொண்டால், கபம் மற்றும் பித்த உடல்வாகோடு ஒப்பிடலாம்.

ஒரு சினிமாவினை எடுத்து கொண்டால், இயக்குனரை introvert ஆகவும், கதாநாயகனை extrovert ஒப்பிடலாம். நாம் பெரும்பாலும், இயக்குனரை விட்டு விட்டு, கதாநாயகனை அதீதமாக புகழ்ந்து கொண்டிருப்போம்!!!! ஆனால், சமீபத்தில் வந்த அறம் திரைப்படம், இதற்கு விதிவிலக்கு!!! அதில் இருவரையும் சமமாக பாராட்டுகிறோம்!!!! அப்படத்தில், நயன் தாராவிற்கு பதிலாக, வேறொரு கதாநாயகன் நடித்திருந்தால், இயக்குநர் கோபியின் உழைப்பு மறைக்கப்பட்டிருக்கலாம். இதுவே நிதர்சனம்!!!

ஒரு நாடு சிறப்பாக செயல்படுகிறது என்றால், அதற்காக மன்னனை புகழ்ந்து கொண்டிருப்போம்!!! ஆனால், மன்னருக்கு பிண்ணணியில் ஆலோசனை வழங்கிய அமைச்சரை இலகுவாக மறந்து விடுவோம்!!! கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர் மற்றும் தடுப்பாளர்களின் திறமையை மறந்து விட்டு, மட்டை வீச்சாளர்களை மட்டும் புகழ்ந்து கொண்டிருப்பது போல!!!! ஆணாதிக்கம்- பெண்ணடிமை தனம் இதில் அடங்கும்!!!!

இந்த ஏற்ற - இறக்க புரிதல் என்பது அனைத்து துறைகளிலும் வியாபித்திருக்கிறது. இதற்கு யாரை குற்றம் சொல்வதெற்கு தெரியவில்லை.

Extrovert மனநிலை உள்ளவர்கள், உலக மக்கள் எதை விரும்புவர்களோ, அதை மட்டும் செய்யும். ஆதலால், அளவுகளுக்கு அதிகமாக தூக்கி பிடிக்கப்படுவார்கள். .கா- சினிமாவில் கதாநாயகன்/கதாநாயகி, நாட்டின் மன்னன். சித்த உடல்வாகு அடிப்படையில், கப உடலோடு ஒப்பிடலாம்.

Introvert மனநிலை உள்ளவர்கள், உலக மக்களுக்கு எது நல்லதோ, அதை செய்வார்கள். ஆதலால், அதற்கு அங்கிகாரம் எளிதாக கிடைக்காது. அத்திறமையை புரிந்து கொள்வதற்கு காலங்கள் நிறையவே தேவை!!! ..கா. சினிமாவில் இயக்குநர், அமைச்சர். சித்த உடல்வாகு அடிப்படையில், பித்த உடலோடு ஒப்பிடலாம்.

நிற்க!!! மேற்கண்ட அனைத்தும் சற்று ஆழமான புரிதலே!!! வாசிப்பு தளம் பெரியது!!! மேற்கண்டத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவெனில்….

மற்றவரை புகழ்ச்சியை கண்டு மதி மயங்கவும் கூடாது!!! இகழ்ச்சியை கண்டு மதி கெடவும் கூடாது!!! இவ்வுலகத்திற்கு, எந்தவொரு திறமையையும் அங்கிகரிக்கவும், அடையாளம் காட்டவும் தெரியாது!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment